நல்லவேளை நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். இவரது பவுலிங்கை என்னாலும் ஆடியிருக்க முடியாது – சேவாக் ஓபன் டாக்

sehwag
- Advertisement -

வழக்கம் போல் இல்லாமல் இந்த வருட ஐபிஎல் தொடரில் பந்து வீச்சாளர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சில பந்துவீச்சாளர்கள் எல்லாம் போட்டிக்கு 2 முதல் 3 விக்கெட்டுகளை அள்ளிக் கொண்டு இருக்கின்றனர். டெல்லி அணியின் காகிசோ ரபாடா, ராஜஸ்தான் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்கள் எல்லாம் ஒரு போட்டிக்கு குறைந்தது இரண்டு விக்கெட்டுகள் ஆவது எடுத்து விடுகின்றனர்.

bumrah

- Advertisement -

இதில் டெல்லி அணி முதலிடத்தில் நீடித்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடிய நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்ற தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. ராஜஸ்தான் அணி மேலும் இந்த அணி சொதப்பி வந்தாலும் அணியின் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது வேகத்தின் மூலம் ஒவ்வொரு பேட்ஸ்மேன் களையும் கதிகலங்க வைத்து வருகிறார்.

குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து போட்டிகளிலும் நன்றாக பந்து வீசுகிறார். இதுவரை பதினொரு போட்டிகளில் விளையாடி 41 ஓவர்கள் வீசி இருக்கிறார் ஆர்ச்சர் அதில் 130 பந்துகளில் ஒரு ரன் கூட அவர் விட்டுக் கொடுக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு. டி20 போட்டிகளில் ஒரு பந்தை கூட ரன் எடுக்காமல் விடமாட்டார்கள் பேட்ஸ்மேன்கள் ஆனால் ஆர்ச்சர் வீசிய 50% பந்து ஒரு ரன் கூட எடுக்க பந்துகளாக வீசியுள்ளார்.

இந்நிலையில் இவர் குறித்து பேசியிருக்கிறார் விரேந்தர் சேவாக் கூறுகையில்…. டேவிட் வார்னருக்கு சோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து எனக்கே அச்சுறுத்தலை தந்தது. ராஜஸ்தான் அணியின் ஒரே ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர்தான் அப்படியிருக்கையில் அவரது பந்து வீச்சை டேவிட் வார்னர் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு இருக்க வேண்டும்.

Archer 1

ஆனால் வார்னரே அவரது பந்துவீச்சில் சிரமப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆன அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து நான் தப்பித்தது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் விரேந்தர் சேவாக்.

Advertisement