- Advertisement -
ஐ.பி.எல்

ஜடேஜா எப்போடா வீட்டுக்கு போலாம்னு ஆடுறாரு.. அவர் எந்த இடத்தில் விளையாடனும்? – சேவாக் கருத்து

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த தொடரின் முதல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக எஞ்சியுள்ள 5 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜடேஜா எந்த இடத்தில் விளையாடனும் : சேவாக் கருத்து

தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்படும் இந்த தொடரில் சிஎஸ்கே அணி அடைந்துள்ள பின்னடைவு பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் சென்னை அணியின் வீரர்கள் தேர்வு சரியாக அமையாததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அணியில் உள்ள எந்த ஒரு பேட்ஸ்மனும் பெரியளவில் இண்டென்ட் காண்பிக்காமல் விளையாடுவதால் தான் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை என்கிற விமர்சனமும் சென்னை அணியின் மீதுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சென்னை அணியில் அதிகளவில் இளம் வீரர்கள் பிளேயிங் லெவனுக்குள் வந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டிங் செய்து வருவதாகவும், பொறுப்பெற்ற முறையில் அவர் விளையாடி வருவதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவரின் செயல்பாட்டை காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் எப்போது வீட்டுக்கு செல்லலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் எப்போது ஐபிஎல் தொடர் முடியும் எப்போது நாம் கிளம்பலாம் என்பது போன்று பொறுப்பெற்ற முறையில் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஜடேஜா இந்த ஆண்டு பயனில்லாத ஒரு ஸ்ட்ரைக் ரைட்டில் விளையாடி வருகிறார். என்னை பொறுத்தவரை அவர் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும். அப்படி களமிறங்கி 15 முதல் 18 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் அவரை சுற்றி இருக்கும் வீரர்கள் அதிரடியாக விளையாட முடியும். ஆனால் இந்த தொடரில் அவரது பேட்டிங் ஆர்டர் மாறி மாறி வருகிறது.

இதையும் படிங்க : சாரா டெண்டுல்கர், சாரா அலி கானுடன் காதலா? கிசுகிசுக்கள் – 3 வருடம் சிங்கிளாக இருப்பது சுப்மன் கில் பதில்

அதோடு தற்போதுள்ள சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது எனக்கு கவலையாக உள்ளது. என்னைப் பொருத்தவரை ஜடேஜா மூன்றாவது இடத்திலும், அவரைத்தொடர்ந்து ஷிவம் துபே நான்காவது இடத்திலும் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் சென்னை அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -