இந்த பையனுக்கு கண்டிப்பா ஐ.பி.எல் விளையாட சேன்ஸ் இருக்கு – இலங்கை வீரர் குறித்து பேசிய சேவாக்

virender sehwag

இந்தியாவில் இந்த ஆண்டு துவங்கி 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பாதிப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடரானது வரும் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தகவல் ஏற்கனவே வெளியானது. அதன்படி இன்னும் சில தினங்களில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் நிர்வாகிகள் தங்கள் அணியுடன் இணைந்து பயோ பபுள் வளையத்திற்கு செல்வார்கள் என்று தெரிகிறது.

IPL

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்க மாட்டார்கள் என்கிற காரணத்தினால் மற்ற அணிகளில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஒரு இலங்கை வீரருக்கு நிச்சயம் ஐபிஎல் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஹஸரங்கா சிறப்பாக பந்து வீசினார். மேலும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கெய்க்வாட்டை அவர் கடைசி t20 போட்டியில் துவக்கத்திலேயே விரைவாக வீழ்த்தியதால் இந்திய அணி சரிவை சந்தித்தது.

Hasaranga-1

இதன் காரணமாக நிச்சயம் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு ஸ்பின்னர்கள் தேவைப்படுகிறதோ அந்த அணி அவரை எடுக்க ஆர்வம் காட்டும். நிச்சயம் அவர் ஏதாவது ஒரு ஐபிஎல் அணியால் தேர்வு செய்யப்படுவார். ஐபிஎல் தொடருக்கு முந்தைய இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அவர் ஏதாவது ஒரு அணியால் வாங்கப்படுவார் என்று சேவாக் கூறினார்.

- Advertisement -

hasaranga

மேலும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அவரின் ரேங்கிங் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என்றும் இருப்பினும் அவர் ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் என சேவாக் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான தகவலின்படி பெங்களூரு அணி ஆடம் ஸாம்பாவுக்கு பதிலாக வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement