ரிஸ்க்கே எடுக்காம அதிரடியா ஆடறதுக்கு இவரை பாத்து கத்துக்கோங்க – இந்திய வீரரை புகழ்ந்த சேவாக்

virender sehwag
- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரரும், டெல்லி அணியின் மூத்த வீரருமான ஷிகார் தவான் கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஐ.பி.எல் டி20 போட்டிகளில் தங்களது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி அவர் 497 ரன்களை அடித்து அதுமட்டுமின்றி 136 ஸ்டிரைக் ரேட்டில் அந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு 521 ரன்களும், கடந்த 2020 ஆம் ஆண்டு 618 ரன்களையும் அடித்து அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் மிகவும் பொறுமையாக ஆடுகிறார் என்று இந்திய அணியிலிருந்து சிறிது காலம் ஒதுக்கப்பட்ட ஷிகர் தவான் மீண்டும் ஐ.பி.எல் டி20 தொடரில் அதிரடியாக விளையாடி வருவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 14வது சீசனில் கூட இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 186 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதிலும் கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 92 ரன்கள் விளாசி தனி ஒரு ஆளாக டெல்லி அணிக்கு வெற்றியையும் தேடித் தந்தார்.

இந்நிலையில் இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே பிரமாதமாக ஆடிவரும் தவானின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தவானைப் புகழ்ந்து கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஸ்க் எடுக்காமல் எப்படி ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி அதிரடியாக ஆடுவது என்பதற்கு ஷிகர் தவான் ஒரு சிறந்த உதாரணம். தடுமாற்றம் இல்லாமல் ரன் குவிப்பதை இவரைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

Dhawan 1

பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் அடித்த 92 ரன்கள் அதற்கு ஒரு நல்ல சான்று என சேவாக் கூறியுள்ளார். டி20 தொடரில் அவ்வப்போது இந்திய அணியில் வெளியேற்றப்பட்டு வரும் தவானுக்கு இந்த ஐபிஎல் தொடர் ஒரு சிறப்பான தொடராக அமைந்துள்ளது. அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தைப் பிடிப்பார் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement