பி.சி.சி.ஐ இவருக்கு ட்ரைனிங் கொடுத்தா வேற லெவல்ல விளையாடுவாரு – இளம்வீரருக்கு சப்போர்ட் செய்த சேவாக்

Sehwag
Advertisement

ஐபிஎல் தொடரானது எப்பொழுதுமே பல திறமையான இளம் வீரர்களை இந்திய அணிக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒரு தொடராக அமைந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரை சரியாக பயன்படுத்தும் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெறுகின்றனர். அதுமட்டுமின்றி தங்களது சிறப்பான ஆட்டத்தினால் அவர்கள் இந்திய அணியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

IPL

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பெரிய அளவில் கவனத்தை வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் அணியை சேர்ந்த இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ பயிற்சி அளிக்க வேண்டும் என சேவாக் தனது கருத்தினை கூறியுள்ளார். நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற 45 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பந்து வீசிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர் வீசி 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் அவரது இந்த செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில் : அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் இந்திய அணி நிச்சயம் பயனடையும். அந்த அளவிற்கு அவர் தனது திறன்களை வளர்த்துக் கொண்டு வருகிறார்.

Arshdeep

அவருக்கு நிச்சயம் பிசிசிஐ உதவவேண்டும். இளம் வீரரான அவருக்கு பிசிசிஐ பயிற்சி அளித்தால் நிச்சயம் அவர் பெரிய வீரராக மாறுவார். சமீபத்தில் மூன்று நாட்கள் ஜாகிர் கான் உடன் பணியாற்றிய அவர் பந்தை ஸ்விங் செய்கிறார். கற்பனை செய்து பாருங்கள் பிசிசிஐ தொடர்ந்து அவருக்கு பயிற்சி அளித்தால் நிச்சயம் இந்திய அணிக்காக உருவாகும் புதிய பிரபலமான வீரராக இவர் மாறுவதற்கான அனைத்து வாய்ப்பும் உள்ளது.

arshdeep 1

அர்ஷ்தீப் சிங் மிகச் சிறந்த ஒரு பவுலர். தற்போது கடினமாக உழைத்து இந்த அளவில் விளையாடி வருகிறார். விரைவில் அவர் இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement