ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தா.ர் அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பிரித்வி ஷா 5 ரன்களுடனும், தவான் ரன் ஏதும் எடுக்காமலும், ஹெட்மையர் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பண்ட் ஆகியோர் ஓரளவு சிறப்பாக விளையாடி 73 ரன்கள் மாற்றி அமைத்தனர். அதன்பிறகு பண்ட் 31 ரன்களில் வெளியேற இறுதி நேரத்தில் ஆல்ரவுண்டர் மர்கஸ் ஸ்டாய்நிஸ் அதிரடியாக 21 பந்துகளில் 53 ரன்கள் குவித்து டெல்லி அணி ஒரு டீசன்டான ஸ்கோரை எட்ட உதவினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்களை எடுத்தது.
பிறகு 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியே இழுந்து வெளியேறிய பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்தன. கருண் நாயர் ஒரு 1 ரன் ரன், நிக்கோலஸ் பூரான் ரன் எடுக்காமலும், மேக்ஸ்வெல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பஞ்சாப் அணி.
அதன்பிறகு சர்பராஸ் கான் 12 ரன்கள் அடித்தார். அப்போது அவர்கள் 55 ரன்ளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தனர். அதன் பின்னர் கிருஷ்ண கவுதம் மற்றும் மயங்க் அகர்வால் தொடர்ந்து விளையாடினார். தனி ஒரு ஆளாக நின்று 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்த அகர்வால் போட்டியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். வெற்றிக்கு 3 பந்துகளுக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேரினார்.
அடுத்த பந்தியில் 1 ரன் தேவைப்பட ஜோர்டானும் ஆட்டமிழந்து வெளியேற போட்டி டையில் முடிந்தது. அதன்பிறகு சூப்பர் ஓவரில் விளையாடிய பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியில் பண்ட் மற்றும் ஐயர் ஆகியோர் சூப்பர் ஓவரை எதிர்கொள்ள இறங்கினர். இரண்டு பந்துகளில் 3 ரன்கள் அடித்த டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
I don’t agree with the man of the match choice . The umpire who gave this short run should have been man of the match.
Short Run nahin tha. And that was the difference. #DCvKXIP pic.twitter.com/7u7KKJXCLb— Virender Sehwag (@virendersehwag) September 20, 2020
இந்நிலையில் இந்த போட்டியில் அம்பயர் செய்த தவறினால் பஞ்சாப் அணி தோற்றது என்று சேவாக் தனது கருத்தினை காட்டமாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். சேவாக் கூறியது உண்மைதான் ஏனெனில் பஞ்சாப் அணி வெற்றி நெருக்கத்தில் இருந்த பொழுது அகர்வாலுடன் ஒரு பந்தை அடித்துவிட்டு இரண்டாவது ரன்னை கம்ப்ளீட் செய்தார்.
ஆனாலும் அகர்வால் கிரீசை தொடவில்லை என்று ஷார்ட் ரன் என அறிவித்து ஒரு ரன்னை மட்டுமே அம்பயர் வழங்கினார். அந்த ரன்னை மட்டும் பஞ்சாப் அணி பெற்றிருந்தால் சூப்பர் ஓவர் வரை செல்லாமல் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும் இதுவே சேவாக் கூறிய கருத்து அதையே ரசிகர்களும் கூறி இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.