இவங்க 2 பேரோட ஆட்டம் ரொம்ப மோசம். இப்படியா தோப்பீங்க – கே.கே.ஆர் அணியை விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 5வது போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் சர்மா 43 ரன்கள் குவித்தனர். கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளர் ரசல் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

kkrvsmi

- Advertisement -

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் ராணா 57 ரன்களையும், கில் 33 ரன்களை குவித்தனர். இலக்கு சிறியதாக இருந்ததால் எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் துவக்க வீரர்கள் இருவரை தவிர அடுத்து வந்த எந்த வீரரும் 10 ரன்கள் கூட அடிக்காததால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களின் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக இந்த போட்டியில் கொல்கத்தா அணி எளிதாக ஜெயித்து இருக்க வேண்டிய கட்டத்தில் அவர்களுக்கு 28 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த நிலையில் களத்தில் பவர் ஹிட்டர்களான ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தும் கொல்கத்தா அணி தோல்வி பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக மட்டும் அமைந்தது மட்டுமல்லாமல் இந்த தோல்விக்கு இவர்கள் இருவரும் காரணம் என்று பார்க்கப்படுகிறது.

karthik

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சில விமர்சனங்களை முன்வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரசல், தினேஷ் கார்த்திக் இருவரும் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து விளையாடினார்கள். அதுவே அவர்களின் தோல்வி காரணமாக அமைந்தது. இது ஒரு கேவலமான தோல்வி, கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை கோட்டை விட்டுள்ளது. முதல் போட்டி முடிந்ததும் கொல்கத்தா வீரர்கள் விருப்பப்படி விளையாடுவார்கள் என்று மோர்கன் கூறியிருந்தார்.

chahar

இதுதான் உங்களின் விருப்பமா என சேவாக் கேள்விகளால் விளாசித் தள்ளினார். மேலும் ராணா, சுப்மன் கில் இருவரும் ஆட்டமிழந்தது ஏற்புடையது அல்ல. இருவரில் ஒருவராவது கடைசிவரை நிலைத்து நின்று இருக்க வேண்டும். வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியில் எப்படி தோல்வி அடைவது என்பதை கொல்கத்தா அணியில் இந்த போட்டியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அவர் விளாசித் தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement