ரகசிய குறியீடு மூலம் மோர்கனுக்கு வந்த சிக்னல். இதெல்லாம் என்ன ஏமாத்து வேலை – விளாசிய சேவாக்

நேற்றைய முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் இரண்டாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் கொல்கத்தா அணி தற்போது உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி நிர்வாகம் டக் அவுட்டிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை மோர்கனுக்கு காட்டினார்கள். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது.

kkr

தற்பொழுது இதைப்பற்றி இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஒரு சில வார்த்தைகளை கூறி இருக்கிறார். முதலில் பஞ்சாப் அணி பேட்டிங் விளையாண்டு கொண்டு இருக்கும் வேளையில், கொல்கத்தா அணி நிர்வாகம் ஒரு பலகையை மோர்கனுக்கு தெரியும்படி காட்டியது. அந்த பலகையில் 54 ஒரு குறுஞ்செய்தி பொறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறுஞ்செய்திகள் மூலம் ஏதோ ஒரு விஷயத்தை அவருக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.

ஒன்று அந்த குறுஞ்செய்தியில் இருஙக படி பந்து வீச்சாளரை மாற்ற வேண்டும் அல்லது பீல்டு அமைப்பை மாற்ற வேண்டும் என்பதே அதனுடைய பொருளாக நமக்கு தெரிகிறது. இதை பல்வேறு ரசிகர்களும் கண்டித்து வரும் வேளையில் விரேந்திர ஷேவாக், உலக கோப்பையை மோர்கன் வென்றுவிட்டார் ஐபிஎல் தொடர் ஒன்றும் அவருக்கு கடினமானது அல்ல. இவ்வாறு கொல்கத்தா அணி நிர்வாகம் செய்த இருக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன். மேலும் இதுபோல் செய்வதே மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

morgan

மேலும் அழுத்தமாக அவர் ஒன்றும் மோசமான கேப்டனோ அல்லது சாதாரண கேப்டனோ கிடையாது. உலக கோப்பையை அவ்வளவு அற்புதமாக விளையாடி என்று கொடுத்தவர் அவருக்கு எந்த நேரத்தில் எந்த விதமான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும்.

- Advertisement -

prasidh krishna

எனவே நீங்கள் ( கொல்கத்தா அணி நிர்வாகம் ) நல்லது செய்கிறேன் என்று எண்ணி அவரை விவாத பொருளாக மாற்றி விடாதீர்கள். இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று மீண்டும் விரேந்திர ஷேவாக் கூறி முடித்தார்.