இவர் ஐ.பி.எல் தொடரில் வேஸ்ட். எதுக்கு அவரை எடுக்குறாங்கனு எனக்கு தெரியல – சேவாக் ஓபன் டாக்

Sehwag
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களால் முடிந்தவரை முட்டி மோதி புள்ளி பட்டியலில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்து வருகின்றன. ஆனால் எப்போதும் போல ஒரு சில சர்வதேச வீரர்கள் அதிக எதிர்பார்ப்பிற்கு இடையே மோசமாக செயல்படுவதும் உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு சீசனிலும் அதிக கிராக்கி உடன் ஏலத்தில் விலை போகி தொடரின்போது சோபிக்காமல் போகும் வீரர்களில் ஆஸ்திரேலிய அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லும் ஒருவர்.

ipl

பஞ்சாப் அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய அவரை 2018 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 கோடி கொடுத்து எடுத்தது. மீண்டும் அந்த சீசனில் அவர் சொதப்ப அதன் பின்பு நடப்பாண்டில் அவரை 10.75 கோடிக்கு மீண்டும் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் இம்முறையும் வழக்கம் போலவே அவர் படு மோசமாக விளையாடி வருகிறார். எந்த இடத்தில் இறங்கினாலும், எந்த சூழ்நிலையில் இறங்கினாலும் சரி சரியாக விளையாடுவது கிடையாது. அவர் ஆடிய 6 போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இந்த ஆறு போட்டிகளிலுமே சேர்த்து வெறும் 48 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏதாவது ஒரு போட்டியிலாவது தனது அதிரடியை நிரூபித்து அணியை கரை சேர்ப்பார் என்று பஞ்சாப் அணி அவரை நம்பி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தாலும் அவர் தொடர்ந்து சொதப்பி கொண்டே தான் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிரடி சதம் அடித்த அவர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தனர்.

maxwell

ஆனால் இந்த சீசனிலும் அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து cricbuzz இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள சேவாக் கூறுகையில் : மேக்ஸ்வெல் எந்த ஆர்டரில் இறங்கினாலும் சரியாக விளையாடுவதில்லை. அனைத்து போட்டிகளிலும் அவர் மோசமான ஷாட்டுகளை விளையாடி சீக்கிரமே அவுட்டாகி வெளியேறி வருகிறார். அவரது மனநிலையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

Maxwell

ஒவ்வொரு ஆண்டும் இதையே தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கின்றனர். எந்த சீசனிலும் சரியாக விளையாடாத ஒரு வீரரை எவ்வாறு இவ்வளவு பெரிய விலைக்கு ஏலம் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவருக்குப் பின்னாலேயே ஏன் ஓடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை ? என்று கடுமையாக சேவாக் அவரை விளாசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement