ஐ.பி.எல் அணியின் கேப்டனாக செயல்பட இவர் தகுதியானவர் கிடையாது – விளாசிய சேவாக்

Sehwag
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீப சில வருடங்களாகவே மிக பெரிய அளவில் சொதப்பி வந்தது. அதன் காரணமாக இந்த ஆண்டு இந்த தொடர் முழுவதையும் தலைமை தாங்கும் பொறுப்பை இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் இடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக அணியை வழிநடத்தி பல வெற்றிகளை குவித்த காரணத்தினால் அந்த கேப்டன் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கூறியது.

- Advertisement -

நிர்வாகம் நினைத்தது போலவே முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு அடுத்த போட்டிகளில் அந்த அணி அப்படியே தலைகீழாக விளையாடியது. அந்த அணி விளையாடிய இரண்டாவது போட்டியில் மும்பை அணியிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு அடுத்த மூன்றாவது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அதற்கு அடுத்த நான்காவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இப்படி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்தது அந்த அணிந்து நிர்வாகம் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Morgan

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனின் மோசமான கேப்டன்சி குறித்து இந்திய முன்னாள் வீரரான சேவாக் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். பேட்டிங் மூலம் அணியை வெற்றி பெற செய்யும் வீரர்களும் பவுலிங் மூலம் அணியை வெற்றிபெற செய்ய வீரர்களும் அதிக அளவில் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்களை தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்து வந்த மோர்கனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வைத்துக்கொண்டு வெற்றிகளை பெற முடியவில்லை.

Morgan-1

அவரிடம் தற்பொழுது இங்கிலாந்து அணி இல்லை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் அவரிடம் தற்பொழுது உள்ளது. அந்த அணிக்கு அவர் தான் கேப்டன். இந்த அணியை வைத்துக் கொண்டுதான் அவர் வெற்றிகளை பெற முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நடந்து முடிந்த போட்டிகளில் அவர் அதை செய்ய தவறி இருக்கிறார். எனவே ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் மோர்கன் சிறந்த கேப்டன் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement