ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பின்பு அமித் மிஸ்ரா பாவமா என்கிட்ட வந்து கேட்ட விஷயம் என்ன தெரியுமா ? – சேவாக் பகிர்வு

Sehwag
- Advertisement -

கடந்த 20ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டனர். முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா மட்டும் 44 ரன்கள் அடித்தார்.
அன்றைய போட்டியில் மிக அபாரமாக பந்துவீசி அமித் மிஸ்ரா மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை அணியை அதிக ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். அவர் எடுத்து 4 விக்கெட்டுகள் ( ரோகித் சர்மா, இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா மற்றும் பொள்ளர்டு ) ஆட்டத்தில் டெல்லி அணிக்கு சாதகமாக மாற்றியது.

mishra

- Advertisement -

இதன் காரணமாக அதன் பின்னர் விளையாடிய டெல்லி அணி மும்பை அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 19.1 ஓவர்களில் வெற்றி வெற்றி பெற்றது. இந்நிலையில் அன்றைய போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசி அமித் மிஸ்ராவை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். அமித் மிஸ்ரா எப்பொழுதும் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் நன்றாக பழகுவார்.

அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தால் மைதானத்தில் நிற்கும் அனைத்து வீரர்களும் வருத்தப்படுவார்கள், அதேபோல அவர் நன்றாக பந்துவீசி விக்கெட் எடுத்தால் அனைவரும் கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு அனைவரது மத்தியிலும் மிகுந்த நட்புரிமையுடன் பழகுவார்.

mishra

சுழற் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அமித் மிஸ்ரா மிகப் பெரிய ஜாம்பவான் என்று கூறலாம். அதன் காரணமாகவே ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் மத்தியில் இரண்டாவது வீரராகவும், ஸ்பின் பவுலர்களில் முதல் வீரராகவும் உள்ளார். வயது ஆக ஆக இன்றும் அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

Mishra

மேலும் ஒரு மறக்க முடியாத நினைவை விரேந்திர சேவாக் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை அமித் மிஷ்ரா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். நான் உடனடியாக அவரிடம் சென்று உனக்கு என்ன வேண்டும் கேள் நான் செய்து கொடுக்கிறேன் என்று கேட்டேன். அவர் வேறு ஏதோ கேட்கப் போகிறார் என்று நினைத்த வேளையில், எனது சம்பளத்தை சற்று அதிகப்படுத்தி தரச் சொல்லுங்கள் என்று உருக்கமாக என்னிடம் கேட்டார். அவர் அப்படி கேட்டதும் நான் சற்று அமைதியாகிவிட்டேன் என்று விரேந்திர ஷேவாக் கூறினார்.

Advertisement