டிராவிட் தோனி மீது கோபப்பட்டு நான் பாத்திருக்கேன். பல வருஷத்துக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூறிய சேவாக்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் தனது பொறுமையான பாவத்திற்கும், அமைதியான குணத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். அதுமட்டுமின்றி இவருடைய அமைதியான பண்பு இவருக்கு பல கோடி ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டிராவிட் நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த இணையத்தில் யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக டிராவிட் கோபப்பட்டு நடிப்பது போல அந்த விளம்பரம் தோன்றுகிறது.

dravid-1

- Advertisement -

மேலும் இந்த விளம்பரம் சமீபத்தில் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகியது. அதுமட்டுமின்றி அந்த விளம்பரத்தில் டிராவிடின் கோபத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அதனை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதுபோன்று டிராவிட்டை நாங்கள் பார்த்ததே கிடையாது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 48 வயதான ராகுல் டிராவிட் கிரிக்கெட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது மட்டுமின்றி இந்திய அணிக்கும் பல இளம் வீரர்களை பயிற்சி செய்து அனுப்பி வருகிறார்.

சில ஆண்டுகள் முன்பு வரை இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது டிராவிட்டை தான் கோபமான முகத்துடன் பார்த்து உள்ளதாகவும் அதுவும் தோனியை அவர் கடிந்ததாகவும் சேவாக் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் : தோனி இளமைக்காலத்தில் நடந்த சம்பவம் இது. நாங்கள் இந்திய அணி ஒரு முறை பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தோம். அந்த தொடரில் ஒரு போட்டியில் தோனி ஒரு தவறான ஷாட்டை ஆடி பாயின்ட் திசையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

Dravid

அப்பொழுது டிராவிட் “தோனியை இதுபோன்றுதான் நீ விளையாடு வாயா ? இந்த ஆட்டத்திற்கு இது தேவையான ஷாட்டா ? நீ போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் அதை நீ கற்றுக் கொள்” என கோபப்பட்டு தோனியிடம் பேசியதாக சேவாக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதற்கடுத்து சம்பவத்தை பகிர்ந்த சேவாக் கூறுகையில் : டிராவிட் அவ்வாறு தோனியை திட்டியதற்கு பிறகு மற்றொரு நாள் தோனி பேட்டிங் செய்ய வந்தார். அப்பொழுது அதுபோன்ற ஷாட்டுகளை அவர் விளையாடவில்லை உடனே நான் தோனியிடம் சென்று கேட்டேன். ஏன் உனக்கு என்ன ஆச்சு ? அதுபோன்ற அதிரடியான ஷாட்டுகளை விளையாட மாட்டாயா ? என்று கேட்டேன்.

Dravid

அதற்கு தோனி என்னிடம் நான் மீண்டும் ஒருமுறை டிராவிடிடம் திட்டு வாங்க விரும்பவில்லை நான் பொறுமையாக நின்று போட்டியை முடித்து கொடுக்க வேண்டும் என தோனி கூறியதாகவும் சேவாக் பகிர்ந்துள்ளார். பலருமே டிராவிட் கோபப்பட்டு பார்த்ததில்லை என்று கருத்துக்களை கூறி வர தற்போது டிராவிடை கோபமாக பார்த்துள்ளதாக சேவாக் கூறிய இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement