சி.எஸ்.கே அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கான அனைத்து தகுதியும் இவரிடம் இருக்கு – சேவாக் கைகாட்டிய அந்த நபர் ?

Sehwag

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததிலிருந்து சாம்பியன் அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு மட்டுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த சிறப்பான நிலையை அடைவதற்கு காரணமாக அந்த அணியின் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்கவாட்டும் ஒரு காரணமாக திகழ்கின்றார்.

ruturaj 1

அவர் கடைசியாக விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் 64, 33 மற்றும் 75 ரன்கள் குவித்து சிறப்பான பார்மில் உள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைசி சில போட்டிகளில் பங்கேற்ற அவர் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஆண்டு அவர் துவக்க வீரராக களமிறங்கி சிஎஸ்கே அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ருதுராஜ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கேப்டனாகவும் தகுதி இருக்கிறது என்று பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கெய்க்வாட் பேட்டிங்கில் கண்டுள்ள முன்னேற்றம் நிச்சயம் அணியை தலைமை தாங்கும் அளவிற்கு மாறும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் தேவையான நேரத்தின் போது அவர் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். ஒரு குவாலிட்டியான பேட்ஸ்மேனுக்கு இருக்கும் அனைத்து திறமையும் அவரிடம் உள்ளது. எனவே இனிவரும் காலத்தில் அவர் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Ruturaj

மேலும் குறிப்பிட்ட அவர் : உள்ளூர் போட்டிகளில் கெய்க்வாட்டிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் சிஎஸ்கே அணிக்காகவும் தலைமை தாங்குவார். இதுவரை நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. அதேபோன்று அவருடன் விளையாடியது கிடையாது இருப்பினும் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் கேப்டனாக மாறுவார் என்பது நிச்சயம் என்று தோன்றுகிறது.

- Advertisement -

ruturaj

அவர் பேட்டிங் செய்யும் பொழுது மிகவும் அமைதியாக தேவையான நேரத்தில் ரிஸ்க் எடுத்து நேர்த்தியாக விளையாடுகிறார். அதேபோன்று அவர் ஆட்டத்தில் தெளிவும் இருக்கிறது. இது போன்ற சில குவாலிட்டிகள் அவரிடம் இருப்பதால் நிச்சயம் அது சிஎஸ்கே அணிக்கு எதிர்காலத்தில் உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு துவக்க வீரராக தற்போது 6 போட்டிகளிலும் விளையாடி வரும் அவர் 192 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 129.6 பதிமூன்றாவது சராசரி 32 ரன்கள் ஆகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.