- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் ஆடவில்லை என்று தெரிந்தால் நான் எனது டீவியை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுவேன் – முன்னாள் வீரர் ஓபன்டாக்

5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கப்பட்டது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை அடித்திருந்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி டார்கெட் ஸ்கோரை ஜேசன் ராய் – பட்லர் மற்றும் பேர்ஸடோ – மலான் ஜோடியின் உதவியால் 15.3 ஓவர்களிலேயே அடித்து ஆட்டத்தை முடித்து விட்டது. மேலும் தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தோல்விக்கு விராட் கோலியின் அணித் தேர்வு காரணம் என்று அனைத்து இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.போட்டி தொடங்கும் முன்பே ரோஹித் மற்றும் ராகுல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள் என்று கோலி கூறியிருந்தார்.
ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா ஆடவில்லை. முதலிரண்டு போட்டிக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று விராட் கோலி கூறினார்.

ரோஹித் சர்மா கண்டிப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று கோலி இப்படிக் கூறியது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேலும் நேற்று மூன்று ஸ்பின் பவுலர்கள் இந்திய அணியில் ஆடினார்கள். எதற்காக மூன்று ஸ்பின் ஆப்ஷனை கோலி தேர்வு செய்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் விளையாடாதது குறித்து சேவாக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா சமீபகாலமாக நல்ல பார்மில் உள்ளார்.

மக்கள் அவரது அதிரடி பேட்டிங்கை காணவே மைதானத்துக்கு வருகின்றனர். மாடர்ன் கிரிக்கெட்டில் ரசிகர்களை மைதானத்திற்கு வரவைக்கும் வெகு சில வீரர்களும் ரோஹித் சர்மாவும் ஒருவர். அப்படி வரும் மக்கள் ரோகித்சர்மா ஆடவேண்டும் அதை காண வேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் வருகின்றனர். மேலும் ஒரு ரோகித் சர்மா ரசிகனாக நானும் அவரது ஆட்டத்தை காண எப்போதும் ஆவலாக இருப்பேன். ரோகித் சர்மா ஒருவேளை போட்டியில் ஆடவில்லை என்றால் நான் எனது டிவியை ஆஃப் செய்து விடுவேன்.

அவர் இல்லாமல் நடக்கும் போட்டியை பார்த்தால் அந்தப் போட்டியை முழுமையாக பார்த்த மன நிறைவை தராது. இது அனைத்து மக்களின் மனநிலை ஆகவும் உள்ளது. இவ்வாறு ரோகித் சர்மா நேற்று அணியில் பங்கேற்காதது குறித்து விரேந்திர சேவாக் தனது கருத்தை தெரிவித்தார்.

- Advertisement -
Published by