தோனியிடம் இருக்கும் இந்த திறன் வேறு யாரிடமும் இல்லை – புகழ்ந்து தள்ளிய சேவாக்

Sehwag
- Advertisement -

துபாய் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் 24 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தபோது சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பிறகு வந்த பிராவோ சற்று அதிரடி காண்பிக்க இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் வெற்றி இலக்காக சி.எஸ்.கே நிர்ணயித்தது.

cskvsmi-1

- Advertisement -

அதன் பின்னர் சி.எஸ்.கே சிறப்பாக செயல்பட்டு இந்த போட்டியிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். முதல் இன்னிங்சில் முடிந்து ஒரு டீசன்டான இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே அணி மும்பை அணியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. ரோஹித் மற்றும் பாண்டியா ஆகியோர் அணியில் இல்லாதது அந்த அணியின் பேட்டிங்கில் சற்று பாதித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் தோனியின் கேப்டன்சி குறித்து பேசிய சேவாக் கூறுகையில் : இந்த போட்டியின் வெற்றிக்கு நிச்சயம் தோனியின் கேப்டன்சி தான் காரணம் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் தோனி எப்போதும் போட்டிக்கு முன்னர் எந்தவித திட்டத்தையும் யோசிக்கமாட்டார். களத்தில் போட்டி எவ்வாறு நகர்கிறதோ அதைக்கொண்டே வியூகங்களை அமைப்பார். போட்டியை மிகவும் கூர்மையாக கவனிக்கும் திறன் அவரிடம் உள்ளது.

bravo

இந்த போட்டியிலும் எதிரணியின் பேட்ஸ்மென்கள் செயல்பட்ட விதத்தை பொறுத்து பவுலர்களை சுழற்சி முறையில் பந்துவீசி வைத்தார். அவரது இந்த முடிவு சிறப்பாக அமைந்தது என்று சேவாக் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இஷான் கிஷனுக்கு எதிராக சரியான முறையில் பவுலர்களை மாற்றி பந்துவீச வைத்தது அருமையான ஒன்று அதுமட்டுமின்றி பீல்டிங் செட்டப் என அனைத்தும் அருமையாக இருந்தது.

csk

இஷான் கிஷன் பேட்டிங் செய்யும்போது 4 பீல்டர்களை உள்வட்டத்திற்குள் நிறுத்தியது விக்கெட் வீழ்த்த காரணமாக அமைந்தது. தோனி பந்துவீச்சாளர்களின் மனதை புரிந்து அதற்கு ஏற்றார்போல் பீல்டிங் செட் செய்கிறார். என்னை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் ஷார்ப்பான மூளைக்காரர் தோனி தான் என்றும் சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement