ஐ.பி.எல் போட்டிகளை பார்ப்பது மட்டுமின்றி தோனி விளையாடுவதை பார்க்கவும் நான் மரண வெயிட்டிங் – முன்னாள் வீரர் பேட்டி

msdhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

Dhoni

- Advertisement -

அவர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பு காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால் அவர்களுக்கு அப்போது ஒரே ஆறுதலாக அமைந்த விடயம் யாதெனில் அவர் தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடப் போகிறார் என்ற செய்தி மட்டுமே. சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி விளையாடுகிறார்.

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளில் தோனியை பார்க்க முடியாது என்ற காரணத்தினால் வரும் சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தோனி மீது அடுத்துள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறுகையில் : ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொருக்கும் கூடுதல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

ரசிகர்களுக்கு தோனி மீண்டும் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கும் என்பது உறுதி. இன்னும் ஏராளமானவை இருக்கின்றன நான் அதை அதை சொல்ல தேவையா ? லாக்டோன் காலத்தில் வீட்டில் இருக்கும்போது நான் ஏராளமான பழைய போட்டிகளைப் பார்த்து என் நேரத்தை செலவழித்து வந்தேன்.

Sehwag

என்னுடைய சொந்த இன்னிங்ஸ் உட்பட பலவற்றை குறித்து ஆராய்ந்தேன். கிரிக்கெட் இந்தியர்களின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. தோனியின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். மீண்டும் கிரிக்கெட் தொடர் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement