டி20 கிரிக்கெட்ல என்னால பண்ண முடியாததை ப்ரித்வி ஷா முடிச்சி காட்டியிருக்காரு – பாராட்டிய சேவாக்

Sehwag

நேற்றைய ஐபிஎல் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராணா 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி விட, கில் மற்றும் நிதானமாக விளையாடி 38 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வந்த வீரர்களான திரிபாதி, மோர்கன் மற்றும் நரைன் மோசமாக விளையாட ரசல் மற்றும் இறுதியில் நின்று அதிரடியாக விளையாடி 45 ரன்கள் குவித்தார்.அதன் காரணமாகத்தான் கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவிக்க முடிந்தது.

russell

கொல்கத்தா அணி அவ்வளவு கஷ்டப்பட்டு அடித்த ரன்களை ப்ரித்வி ஷா மிக எளிதாக விளையாடினார். அதிலும் குறிப்பாக முதல் ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரி விளாசி கொல்கத்தா அணியை அச்சுறுத்தினார். முதல் ஓவரை தொடர்ந்து, அவர் நின்று கொண்டிருந்த வரை அனைத்து ஓவரிலும் பந்துகளையும் நாலா பக்கமும் பறக்கவிட்டார். நேற்று அவர் 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபக்கம் 47 பந்துகளுக்கு 46 ரன்கள் குவித்து தவன் அவுட் ஆனார்.

ஷா அதிரடியாக விளையாட மறுபக்கம் தவன் நிதானமாக விளையாட டெல்லி அணி இறுதியாக 16.3 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் விளாசியது, அவ்வளவு எளிதான செயல் அல்ல என்று சேவாக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இதற்கு முன்னர் மாவி மற்றும் ஷா ஒன்றாக இணைந்து விளையாடி இருக்கின்றனர்.

shaw-2

எனவே அவர்களது பலம் மற்றும் பலவீனம் இருவருக்குமே நன்றாக தெரியும். இருப்பினும் நிதானமாக நின்று கேப் பகுதிகளில் பந்தை விரட்டி பவுண்டரி அடிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்று கூறியுள்ளார். நானும் ஆஷிஷ் நெஹ்ராவும் பல உள்ளூர் போட்டிகளில் இணைந்து ஒன்றாக விளையாடி இருக்கிறோம் ஆனால் என்னால் கூட ஒரு ஓவரில் இவ்வளவு பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. எனது அதிகபட்ச ஸ்கோர் ஒரு ஓவரில் 20 தான்.

- Advertisement -

shaw 1

எனக்கும் முன்னர் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் அல்லது 6 சிக்சர்கள் அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என்னால் அடிக்க முடியாததை ஷா நேற்று மிக அற்புதமாக அடித்திருக்கிறார். மேலும் பேசிய சேவாக் நேற்றைய போட்டியில் 82 ரன்களில் அவுட்டானார். நேற்று அவர் ஆடிய ஆட்டத்திற்கு கண்டிப்பாக சதம் அடித்து இருக்க வேண்டும். ஆனால் அவரால் அடிக்க முடியாமல் போனது, என்றும் சேவாக் கூறினார்.