இந்த ஐ.பி.எல் தொடரில் பலர் சிறப்பாக விளையாடினாலும், என் கவனத்தை ஈர்த்தவர் இவர்தான் – சேவாக் புகழாரம்

Sehwag
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரின் 14வது சீசன் 29 போட்டிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் காலவரையின்றி இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது இந்த தொடர் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மற்ற அனுபவம் வீரர்களை காட்டிலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக கவனத்தை ஈர்த்தனர்.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் ஆக சென்னை அணியை சேர்ந்த கெய்க்வாட், பெங்களூரு அணியை சேர்ந்த படிக்கல், டெல்லியைச் சேர்ந்த பிரித்வி ஷா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் பவுலிங்கில் பல புதுமுக வீரர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்சிபி அணியைச் சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக திகழ்கிறார்.

- Advertisement -

அவரைக் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது யாரும் கவனிக்காத ஒரு பவுலரை தேர்ந்தெடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். அந்த வீரர் யார் எனில் டெல்லி அணியை சேர்ந்த அவேஷ் கான் தான். டெல்லி அணியில் பல முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் இந்த வருட ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை இந்த தொடர் முழுவதும் விளையாட வைத்தார். இதுவரை அவர் ஆடிய 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக இரண்டு போட்டிகளில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் ஆவேஷ் கானின் இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய சேவாக் கூறுகையில் : டெல்லி அணியில் ரபாடா, அஸ்வின், அக்சர் பட்டேல், மிஸ்ரா ஆகிய பவுலர்கள் பற்றி தான் அதிகம் எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அவேஷ் கானை யாரும் கண்டுகொள்ளவில்லை அவர் சத்தமே இல்லாமல் இந்த ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Avesh

ஆனால் அவர் குறித்து எந்த பேச்சுகளும் அடிபடவில்லை. எனக்கு தெரிந்து இந்த ஐபிஎல்லில் தனது வேலையை கச்சிதமாக அவர் செய்து வந்தார். போட்டியின் துவக்க, மிடில், முடிவு என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பந்துவீசிய அவர் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் கவனிக்கப்பட வேண்டியவர்களில் ஒருவர் என்றும் அவர் நிச்சயம் இன்னும் பல உயரங்களை எட்டுவார் என்றும் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement