தம்பி இதுதான் உன் வாழ்க்கையிலேயே பெஸ்ட் இன்னிங்ஸ்.. சூரியகுமார் யாதவை பாராட்டிய – வீரேந்திர சேவாக்

Sehwag and SKY
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மோனாக் பட்டேல் தலைமையிலான அமெரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தினர். பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்றே பலரும் நினைத்து இருப்பார்கள்.

சூரியகுமார் யாதவின் இன்னிங்க்ஸை பாராட்டிய : வீரேந்திர சேவாக்

ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அமெரிக்க அணி இந்திய அணியின் பேட்ஸ்மன்களை அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 77 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பினை நோக்கி செல்ல முடியுமா? இந்த போட்டியில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எல்லாம் இருந்தது.

- Advertisement -

ஆனால் அந்த நேரத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது அசத்தலான பார்மை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்ற அவர் 49 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 84 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் இந்திய அணியை சற்று பலமான நிலைக்கு கொண்டு சென்றார்.

அவரது ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 161 ரன்கள் குவித்தது. பின்னர் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இருந்தாலும் நேற்றைய போட்டியில் சூரியகுமார் யாதவ் மட்டும் ஆட்டமிழந்திருந்தால் போட்டியின் முடிவே மாறி இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சூரியகுமார் யாதவின் இந்த சிறப்பான இன்னிங்க்ஸை பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : கவுதம் கம்பீர் கொடுத்த அந்த வார்த்தை தான் என்னோட சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் – சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ் கேரியரில் இது ஒரு மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் சதங்களை அடித்திருந்தாலும் இப்படி போட்டியின் அழுத்தமான ஒரு சூழலில் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ் மறக்க முடியாத ஒன்று. தனி ஆளாக நின்று 84 ரன்கள் அடித்து கேப்டனாக வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது அவரது கரியரின் சிறந்த இன்னிங்ஸ் என்று தான் கருதுவதாக சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement