தமிழக வீரரான இவரால் டி20 கிரிக்கெட்டில் சதம் அடிக்க முடியும். இவர் பொல்லார்ட் மாதிரி – சேவாக் புகழாரம்

sehwag

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர், இளம் வீரர்கள் தங்களது திறைமைய வெளிக்காட்ட ஒரு சிறந்த அடித்தளமாக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடர்களில் ஜொலிக்கும் இந்திய இளம் வீரர்கள், தேசிய கிரிக்கெட் அணியிலும் தங்களது இடத்தைப் பிடித்து வருகின்றனர். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கொரானா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், நடந்து முடிந்துள்ள 29 போட்டிகளிலேயே, பல்வேறு இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து விட்டனர். இப்படி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் பாரட்டுதலைப் பெற்றுள்ளார் தமிழக வீரரான ஷாருக்கான்.

shahrukh 2

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது தமிழகத்தை சேர்ந்த அதிரடி வீரரான ஷாருக்கானை ஏலத்தில் எடுக்க அனைத்து அணி நிர்வாகங்களும் போட்டி போட்டன. இறுதியாக 5.25 கோடி ரூபாய் கொடுத்து ஷாருக்கானை தங்கள் வசப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய ஷாருக்கான், தனது அபாரமான அதிரடி ஆட்டத்தினால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

அவரது ஆட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போன வீரேந்தர் சேவாக், அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கைரன் பொல்லார்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். ஷாருக்கானைப் பற்றி வீரேந்தர் சேவாக் பேசும்போது, அவர் விளையாடுவதைப் பார்க்கும்போது எனக்கு இளம் வயது பொல்லார்ட் தான் நினைவுக்கு வருகிறார். கைரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் அறிமுகமான புதிதில் எப்படி கடைசி கட்டத்தில் சிக்ஸர்கள் அடித்து பௌலர்களை திணறடித்தாரோ அதேபோல் ஷாருக்கானும் செய்கிறார். பொல்லார்டிடம் உள்ள திறமைகள் அனைத்தும் அப்படியே இவரிடமும் உள்ளது.

shahrukh

ஆனால் அவர் பஞ்சாப் அணியில் கடைசியில் விளையாடுவதால், ஒரு சிறிய இன்னிங்சை மட்டுமே அவரால் விளையாட முடிகிறது. இருந்தாலும் அந்த நேரத்தில் ஒரு பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ அதனை ஷாருக்கான் செய்திருக்கிறார் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் பேசிய சேவாக், ஷாருக்கானுக்கு சதமடிக்கும் திறமையும் இருப்பதாக கூறியிருக்கிறார். அதைப் பற்றி அவர் கூறும்போது,

- Advertisement -

ஒருவேளை ஷாருக்கானுக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவர் நிச்சயமாக டி20 ஆட்டங்களில் சதமடிப்பார். தான் எதிர்கொண்ட கடைசி பந்தை தவறவிட்ட ஒரு பேட்ஸ்மேன் அதைப் பற்றி நினைக்காமல், அடுத்த பந்தை எப்படி ஆடுவது என்று நினைத்தால்தான், அந்த பேட்ஸ்மேனால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். இந்த மாதிரியான மனநிலமை ஷாருக்கானிடம் அதிகமாகவே உள்ளது என்று வீரேந்தர் சேவாக் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தினால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தபோது, அந்த அணிக்காக கடைசி கட்டத்தில் களமிறங்கி பொறுப்பாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடிய ஷாருக்கானை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டுமென்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்தில்கொண்டு மீண்டும் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரிலாவது பஞ்சாப் அணி, ஷாருக்கானை டாப் ஆர்டரில் களமிறக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement