என்னை மாதிரியே பேட்டிங்கில் அடிச்சி துவம்சம் பண்ணிட்டாரு – இளம்வீரரை பாராட்டிய சேவாக்

sehwag

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்தது.

srhvsrr

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக இந்தப் போட்டியில் முதன்முதலாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்பிறகு 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்ற ஹைதராபாத் அணி துவக்கத்தில் வார்னர் இஸ்ரோ என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். மனிஷ் பாண்டே 47 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களுடனும், 51 பந்துகளைச் சந்தித்த விஜய் சங்கர் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக மணிஷ் பாண்டே தேர்வானார்.

SRH

இந்நிலையில் நேற்று நடந்த இந்த போட்டி குறித்து யூடியூப் பக்கத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்த சேவாக் : மணிஷ் பாண்டேவின் ஆட்டத்தை குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மணிஷ் பாண்டே ஜி நான் ஆடுவது மாதிரியான ஒரு சிறப்பான இன்னிங்சை விளையாடி உள்ளார். விஜய் சங்கரும் அவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்து அருமையாக ஆடினார்.

- Advertisement -

ஐதராபாத் அணியின் மிடில் ஆர்டர் இவர் மூலமாக பலமாவதுடன், பிளே ஆப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது என்று சேவாக் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பவுண்டரியும், சிக்சருமாக விளாசிய பாண்டே 28 பந்துகளில் அரை சதம் அடித்ததுடன் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் என 83 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.