முக்கிய வீரர்கள் இருந்தும் இவர் அசத்தலாக விளையாடி விட்டார் – சீனியர் வீரரை புகழ்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி எட்டாம் தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இறுதி நாளில் மழை பெய்ததன் காரணமாக இந்தியா வெற்றி பெற வேண்டிய எளிதான போட்டியை டிரா செய்ய வேண்டிய நிலைமை ஆயிற்று.

indvseng

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு திருப்தியாகவே இருந்தது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் குவிக்க இந்திய அணி சிறப்பாக விளையாடி 278 ரன்கள் குவித்து 95 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 303 ரன்களை குவிக்க 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 53 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இதன் காரணமாக கடைசி நாளில் 9 விக்கெட்டுகள் மீதமிருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மழை காரணமாக போட்டி டிரா ஆனது இந்நிலையில் இந்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக விளையாடிய ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

jadeja

ஜடேஜா முதல் இன்னிங்சில் 3 ஓவர்களை மட்டுமே பந்துவீசி இருந்தாலும் பேட்டிங்கில் பின்வரிசையில் இறங்கி தேவையான 56 ரன்கள் எடுத்தார். அவர் அடித்த ரன்கள் இந்திய அணியை நல்ல முன்னிலைக்கு அழைத்துச் சென்றது. அவரது இந்த ஆட்டத்தை பாராட்டி பேசியுள்ள சேவாக் கூறுகையில் : இந்திய அணியின் மிக முக்கியமான வீரர். டெஸ்ட் போட்டிகளில் நாம் விளையாடும் போது அவர் பந்து வீச்சில் 25 முதல் 30 ஓவர்கள் வீசி விடுகிறார்.

Jadeja-2

அதேபோன்று பேட்டிங்கிலும் ஏழாவது எட்டாவது இடத்தில் இறங்கி தேவையான முக்கியமான ரன்களை அவர் சேர்த்து தருகிறார். ஜடேஜா அடித்த அரைசதம் முதல் இன்னிங்சில் கூட முன்னிலை பெற உதவியது. இப்படி தனக்குள் இருக்கும் திறமையை அவர் அமைதியாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர் என சேவாக் புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement