ஜாஹீர் கான், நெஹ்ரா வரிசையில் இவர் நிச்சயம் அசத்துவார். 23 வயது இடதுகை பவுலரை புகழ்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 4வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய 23 வயதான சேட்டன் சக்காரியா அற்புதமாக பந்து வீசினார். பஞ்சாப் அணியின் வீரர்கள் கிறிஸ் மோரிஸ், முஷ்டபிஸூர் ரஹ்மான், ஸ்டோக்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தபோதும் சக்காரியாவின் பந்து வீச்சை அவர்களால் அடித்தாட இயலவில்லை.

gayle 1

- Advertisement -

கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் பெரும் பலமாக திகழ்ந்த மாயங்க் அகர்வாலை தொடக்கத்திலேயே வீழ்த்தினார். இன்னிங்ஸ் முடிவில் சேட்டன் சக்காரியா 4 ஓவர் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பெரும் பலம் படைத்த பஞ்சாப் அணிக்கு எதிராக பயமில்லாமல் சிறப்பாக பந்து வீசிய சேட்டன் சக்காரியாவிற்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சேட்டன் சக்காரியாவின் செயல்பாட்டை புகழ்ந்து தள்ளியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். கிரிக்பஸ் வெப்சைட்டிற்கு இவர் அளித்த பேட்டியில், சேட்டன் சக்காரியாவின் பயமில்லாத செயல்பாட்டை இந்திய அணியின் முன்னாள் லெஜன்ட் பவுலர்களான ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவுடன் ஒப்பிட்டுள்ளார்.

Sakariya

சக்காரியாவின் பெயரை, அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டபோதே தாம் கேட்டதாகவும், ஆனால் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பயமில்லாமல் பந்துவீசுவது மிப்பெரிய ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.

sakariya 2

கடந்த பல ஆண்டுகளாகவே ஐபிஎல் மூலமாக இந்திய அணிக்கு தரம் வாய்ந்த பல வீரர்கள் வந்து கொண்டிருக்கினர். அந்த வரிசையில் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா சேட்டன் சக்காரியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement