என்னங்க இவரு. அரக்கன் மாதிரி பந்து வீசுறாரு – இந்திய பவுலரை புகழ்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி ஆனது 191 ரன்களை மட்டுமே குவிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 290 ரன்களை குவித்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 466 ரன்களை குவித்தது.

rohith 6

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 127 ரன்களையும், புஜாரா 61 ரன்கள் குவித்தனர். அதுதவிர ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அரை சதம் அடிக்க இந்திய அணி இரண்டாவது இன்னிங்சின் இறுதியில் 466 என்கிற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதன் பின்னர் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது ஐந்தாம் நாளில் ஆட்ட நேரத்திற்கு முன்னர் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்காரணமாக 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக பந்துவீச்சாளர்கள் திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல.

Bumrah-4

முதல் இன்னிங்சின் போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா இரண்டாவது இன்னிங்சின் போதும் முக்கியமான நேரத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது அவரை பாராட்டி தற்போது சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : பும்ரா அரக்கத்தனமாக பந்து வீசுகிறார். என்ன மாதிரியான ஒரு பந்து வீச்சு, அவருடைய பந்து வீச்சு அபாரமாக இருந்தது என தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement