என் வாழ்வில் நான் சந்தித்த கடினமான பவுலர் இவர்தான் – சேவாக் ஓபன்டாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகள் 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தான் விளையாடிய காலத்தில் மிகத் திறமை வாய்ந்த அதிரடி வீரரான இவர் உலகின் பல்வேறு முன்னணி பவுலர்களுக்கு எதிராகவும் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் பல அற்புதத்தை நிகழ்த்தி காட்டியவர்.

Sehwag

- Advertisement -

பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் ஷேவாக்க்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது சேவாக் தான் சந்தித்ததிலேயே மிகச்சிறந்த கடினமான பவுலர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை மிகவும் பயமுறுத்திய பவுலர் என்றால் அது இலங்கை அணியை சேர்ந்த முரளிதரன் தான். ஒவ்வொரு முறை இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போதும் முரளிதரன் அணியில் இருக்கும் போது போட்டிக்கு முந்தைய நாள் தூக்கமே வராது.

Muralitharan

எப்போது நான் அவருக்கு எதிராக விளையாடினாலும் அவரது பந்துகளை எவ்வாறு சந்திக்க போகிறேன் என்ற பயம் தான் இருக்கும். கிட்டத்தட்ட ஏழு எட்டு ஆண்டுகள் நான் முரளிதரனுக்கு எதிராக பேட்டிங் செய்ய வந்துள்ளேன். 2001 முதல் 2007 வரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது நான் முரளிதரன் பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டுமோ ? என்ற பயம் என்னுடன் இருந்து கொண்டே இருக்கும் என்று சேவாக் கூறியுள்ளார்.

muralitharan 1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இன்று கூட நான் முரளிதரனுக்கு எதிராக விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் எனக்கு போட்டிக்கு முன்னர் தூக்கம் வராது என்றும் அவர் மிகவும் ஒரு அபாயகரமான பந்துவீச்சாளர், அவரது பவுலிங்கை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement