இந்த ஆண்டின் சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்துள்ள சேவாக் – வீரர்களின் பட்டியல் இதோ

virender sehwag

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்கள், உள்ளூர் வீரர்கள் என பலரும் முழு திறமையை வெளிப்படுத்தினார்கள். தொடர் முடிந்தவுடன் முன்னாள் வீரர்கள் பலர் இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மிகச்சிறந்த ஐபிஎல் அணி ஒன்றை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.

mi

இந்த அணியில் பல ஆச்சரியங்கள் நிறைந்திருக்கிறது. துவக்க வீரர்களாக விளையாடும் பலரை மிடில் ஆர்டரில் களம் இறக்கி விட்டுள்ளார். பந்துவீச்சாளர்களிலும் வித்தியாசத்தை ஏற்படுத்திய வெளியிட்டிருக்கிறார். அவரது அணியில் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

இந்த வருடத்தில் அதிக ரன் குவித்த வீரர்கள் ராகுல் தான் மூன்றாவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நான்காவது இடத்திற்கு விராட் கோலியும், ஐந்தாவது இடத்திற்கு டேவிட் வார்னர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். டேவிட் வார்னர் இந்த இடத்தில் களம் இறங்குவாரா என்பது கேள்விக்குறிதான். ஆறாவது இடத்திற்கு ஏபிடி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் கெரோன் பொல்லார்ட் ஹர்திக் பாண்டியா ஆகியோரை விட்டுவிட்டு ஏபி டிவில்லியர்சை தேர்வு செய்து ஆச்சரியத்தை அளிக்கிறது வேகப்பந்து வீச்சாளர்களை காகிசோ ரபடா, ஜஸ்பிரித் பும்ரா முகமது சமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நன்றாக பந்துவீசிய தங்கராசு நடராஜன் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் வருகின்றனர்.

- Advertisement -

Rabada

சேவாக் தேர்வு செய்த பெஸ்ட் லெவன் அணி இதோ :

1) கே.எல்.ராகுல் , 2) தேவ்தத் படிக்கல், 3) சூர்யகுமார் யாதவ், 4) விராட் கோலி , 5)டேவிட் வார்னர், 6) ஏ.பி.டி, 7)யுஷ்வேந்திர சஹல், 8) ரஷித் கான், 9) காகிசோ ரபடா, 10) ஜஸ்பரீத் பும்ரா, 11) முகமது ஷமி