இந்தாண்டிற்கான சிறந்த ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்த சேவாக் – கேப்டன் யார்னு பாருங்க ?

sehwag

13வது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த கையோடு விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைவரும் இந்த ஐபிஎல் தொடரில் யார் யார் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தங்களது கண்ணோட்டத்தை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அனைத்து வீரர்களையும் வைத்து ஒரு சிறந்த ஆடும் இறைவனை தேர்வு செய்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ipl-2020

அப்படி இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது அணியை வெளியிட்டிருக்கிறார். அந்த அணியில் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். மூன்றாவது வீரராக அனைத்து அணியிலும் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். 4-வது வீரராக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்த அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்ததாக வித்தியாசமாக டேவிட் வார்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களாக காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரித் பும்ராஹ், முகமது ஷமி,  ஆகியோரும் தேர்வாகியுள்ளார்கள்.

Kohli-ABD

சுழற்பந்துவீச்சாளர்களாக யுஸ்வேந்திர சாஹல், ரசீத் கான் ஆகியோரும் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 ஆவது வீரராக மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

Ishan kishan

விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன் :

கே.எல் ராகுல், தேவ்தட் படிக்கல், சூர்யகுமார் யாதவ், விராட் கோஹ்லி, டேவிட் வார்னர், டிவில்லியர்ஸ், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், ரசீத் கான், இஷான் கிஷன் (12வது வீரர்).