என்னுடைய பார்வையில் இந்த ஆண்டு சொதப்பிய 5 வீரர்கள் இவர்கள்தான் – சேவாக் ஓபன் டாக்

Sehwag

நடப்பு ஆண்டின் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முடிவில் மும்பை அணி கோப்பையை கைப்பற்றி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இந்த தொடருக்கான வரவேற்பு கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

mi

இந்நிலையில் இன்று தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தற்போது இந்த 13 வது சீசனில் மிகவும் மோசமாக செயல்பட்ட வீரர்களை பட்டியலிட்டுள்ளார்.

அதன்படி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து சொதப்பிய சில வீரர்களின் ஆட்டங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படி அவர் தேர்வு செய்த ஐந்து சொதப்பலான வீரர்கள் யார் என்று பார்க்கையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெங்களூரு அணியில் ஏலம் எடுக்கப்பட்ட அணியின் வீரர் ஆரோன் பின்ச் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Finch

அதற்கடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சொதப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரே ரசல் இந்தாண்டு மோசமான செயல்பாட்டை அளித்தார். அதனால் அவர் சில போட்டிகளில் வெளியேவும் அமரவைக்கப்பட்டார்.

- Advertisement -

Russell

இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் வாட்சன், ஆர்சிபி அணியின் டேல் ஸ்டெயின் ஆகிய 5 பேர் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்து சொதப்பிய வீரர்களாக சேவாக் தனது பட்டியலை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.