சுரேஷ் ரெய்னாவின் அசத்தலான ஆட்டத்தை தனது பாணியில் கிண்டலாக கலாய்த்த சேவாக் – வைரலாகும் பதிவு

Sehwag

நேற்றைய சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுக்கிடையிலான போட்டியில் கிட்டத்தட்ட 700 நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ளார் “சின்ன தல ரெய்னா” கடந்த ஐபிஎல் சீசனில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு ஃபிளைட் ஏறிய ரெய்னா, சென்னை தன் முதல் போட்டியை விளையாடும் முன்பே அணியிலிருந்து விலகி இந்தியா திரும்பினார். இதனால் சென்னை அணி அந்த சீசனில் பெரிய சறுக்கலைச் சந்தித்தது.

raina

இதற்க்கு காரணம் தனது குடும்பத்தில் சில பிரச்சனைகள் என்றும் தன் சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியதாக ரெய்னா கூறினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உண்மையை வெளியிட்டது. அதில் ரெய்னா, தோனிக்கு அளித்திருப்பதுபோல் தனக்கும் பால்கனி கொண்ட அறை வேண்டுமென்று நிர்வாகத்திடம் வற்புறுத்தியதாகவும் அதற்க்கு நிர்வாகம் அப்படிப்பட்ட அறை தர இயலாது என்று கூறியதால் கோபம் கொண்ட ரெய்னா அணியைவிட்டு விலகிவிட்டார் என விளக்கமளித்தது. இதற்க்குப் பிறகு அணி நிர்வாகத்திற்க்கும் ரெய்னாவிற்க்கும் இடையில் சில உரசல்கள் இருந்தன.

ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசனில், கிட்டத்தட்ட 700 நாட்களுக்குப் பின் சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வெறித்தனமான கம்பேக்கை கொடுத்துள்ளார் ரெய்னா. ரெய்னாவின் வருகை சென்னை அணிக்கு மிகப் பெரும் பலத்தை அளித்திருக்கிறது.
நேற்றைய போட்டியில் ஒன்டவுனில் களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி வெறும் 36 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம்.

raina

இரண்டு வருடமாக கிரிக்கெட் ஆடவில்லை என்றாலும் நேற்று ரெய்னா தரமான கம்பேக்கை சர்வதேச போட்டிகளில் கொடுத்தார். சிஎஸ்கேவிற்கு மீண்டும் அதன் குட்டி தல திரும்பி வந்துள்ளார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையில் ரெய்னாவின் வருகையை கிண்டலடிக்கும் விதமாக சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் “இதுதான் வித்தியாசம்… ஜெய் ஜெய் பால்கனி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை காமடியாக பார்க்க வேண்டும் சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த சென்னையின் ரசிகர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் சேவாக் பழைய விஷயங்களை கிளறக்கூடாது என்று கோபத்துடன் பதிலளித்து வருகின்றனர்.