ஒரே ஓவரில் மேட்ச் க்ளோஸ்! இப்படி ஒரு மோசமான பவுலரை பார்த்ததே இல்லை – கொட்டு வாங்கும் இளம் வீரர்

CSK-1
- Advertisement -

மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் முறையாக மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ருத்ராஜ் கைக்வாட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பா அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 50 ரன்கள் விளாசினார்.

அவருடன் விளையாடிய மொய்ன் அலி 22 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 35 ரன்களையும் அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் தலா 2 பவுண்டரி மற்றும் சிக்சர் உட்பட 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

210 ரன்கள் குவித்த சென்னை:
அவர்களுடன் மிடில் வரிசையில் விளையாடிய சிவம் துபே தன் பங்கிற்கு 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 49 ரன்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 17 வீரர்களும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 6 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 16* ரன்களை குவித்து அபார பினிஷிங் கொடுத்தனர். அப்படி களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடியாக குவிக்கும் அளவுக்கு லக்னோவின் பந்துவீச்சு மோசமாக இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த சென்னை 210 ரன்கள் குவித்தது.

210 ரன்களை அடித்து விட்டது என்பதால் நிச்சயமாக இந்த வருடத்தின் முதல் வெற்றி உறுதி என காத்திருந்த சென்னை ரசிகர்களின் கனவை அடுத்ததாக களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் சல்லி சல்லியாக உடைத்தார்கள் என்றே கூறலாம். ஏனெனில் பவர்பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பி 10 ஓவர்கள் வரை சென்னை பந்துவீச்சாளர்களை கதறவிட்ட அந்த ஜோடி 99 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே சென்னையின் தோல்வியை உறுதி செய்தது. இதில் கேஎல் ராகுல் 26 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மனிஷ் பாண்டே 5 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஒரே ஓவரில் மேட்ச் க்ளோஸ்:
அந்த சமயத்தில் மறுபுறம் அரைசதம் அடித்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த குயின்டன் டி காக் 45 பந்துகளில் 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய தீபக் ஹூடாவை 13 (8) ரன்களில் அவுட் செய்த சென்னை போட்டியை தன் பக்கம் இழுத்து வெற்றிக்காக போராடியது. அதன் சமயத்தில் லக்னோ வெற்றிபெற கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்ட காரணத்தால் சென்னை வெற்றி பெறும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக 18-வது ஓவருக்குள் லக்னோவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ட்வயன் ப்ராவோ, பிரிடோரிஸ் ஆகிய ஓரளவு சிறப்பாக 2 சென்னை பவுலர்களும் 4 ஓவர்களை வீசி முடித்துவிட்டார்கள். மேலும் ரவிந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோரின் பந்துவீச்சை லக்னோ வீரர்கள் பிரித்து மேய்ந்து கொண்டிருந்த காரணத்தாலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு 4 ஓவர்கள் முடிந்த காரணத்தால் வேறு வழியே இன்றி 19-வது ஓவரை வீச இளம் இந்திய ஆல்-ரவுண்டர் சிவம் துபேவை சென்னை அழைத்தது.

- Advertisement -

இப்படி ஒரு இக்கட்டான நிலையில் பொறுப்புடன் பந்துவீச வேண்டும் என உணராத அவர் ஒரு லோக்கல் போட்டியில் பந்து வீசுவதை போல 2 வைட் பந்துகள் உட்பட மோசமாக வீசினார். அதை பயன்படுத்திய லக்னோ வீரர்கள் எவின் லெவிஸ் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோர் கூட்டாக இணைந்து அந்த ஓவரில் 25 ரன்கள் அடித்ததால் சென்னையின் வெற்றி பஞ்சு பஞ்சாக பறிபோனது. அதன்பின் கடைசி 6 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் ஆயுஷ் படோனி சிக்ஸர் அடித்ததால் 19.3 ஓவரில் 211/4 ரன்களை எடுத்த லக்னோ 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் வாயிலாக தங்களின் முதல் ஐபிஎல் வெற்றியை பதிவு செய்த லக்னோ இந்த வருட ஐபிஎல் தொடரில் வெற்றி பாதைக்கு திரும்பியது. மறுபுறம் 210 ரன்களை எடுத்த போதிலும் பொறுப்பில்லாமல் படுமோசமாக பந்துவீசிய நடப்புச் சாம்பியன் சென்னை கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் தொடர்ந்து இந்தப் போட்டியிலும் மண்ணை கவ்வி 2-வது தொடர் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இப்போட்டியில் பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது உண்மைதான் என்றாலும் 19-வது ஓவரில் முதல் முறையாக பந்துவீசிய சிவம் துபே 10 – 15 ரன்களை கொடுத்திருந்தால் கூட சென்னை அணியால் வெற்றியை நெருங்கியிருக்க முடியும். ஆனால் ஒரேடியாக 25 ரன்களை வாரி வழங்கியதால் 18 ஓவர்கள் வெற்றிக்காக போராடிய சென்னையின் வெற்றி ஒரே ஓவரில் முடிந்து போனது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : 2-வது தோல்வியால் நொறுங்கிய மஞ்சள் இதயங்கள்! வரலாற்றில் முதல் முறையாக அவமானத்தை சந்தித்த சிஎஸ்கே

அந்த அளவுக்கு மோசமாக பந்துவீசிய ஷிவம் துபேவை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ஒருசில முன்னாள் வீரர்களும் வறுத்தெடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் அவரை கலாய்க்கும் வகையில் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் புகைப்படத்தை பதிவேற்றி சிவம் துபே கண்ணத்தில் அறையாமல் அறைந்துள்ளார்.

Advertisement