இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.
ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான சேவாக் பஞ்சாப் அணிக்காக தனது ஆலோசனையை தற்போது வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்படி கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடுவார். ஏனெனில் பெங்களூர் அணிக்காக அவர் ஏற்கனவே பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்து இருக்கிறார். அதனால் அவர்தான் அனுபவம் அவருக்கு உதவும்.
மேலும் இன்றைய போட்டியில் அகர்வாலுடன் கெயில் துவக்க வீரராக களமிறங்க வேண்டும், ராகுல் மூன்றாம் இடத்தில் களம் இறங்கிய விளையாடலாம் அதுவே பஞ்சாப் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு பலம் சேர்க்கும். மேலும் இனிவரும் போட்டிகளில் பஞ்சாப் அணி ஜெயிக்க வேண்டும் என்றால் நிச்சயம் கெயில் அணியில் இருக்க வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.