தென்னாபிரிக்க அணியில் கலக்கும் தமிழன்.! யார் இந்த சீனுரான் முத்துசாமி..?

Seenu-ran
Advertisement

பல்வேறு சர்வதேச கிரிக்கெட் அணியில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் வேறு நாட்டு கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளனர். அதில் இலங்கையின் முத்தையா முரளி தரன், இங்கிலாந்து அணியின் நசீர் ஹுசைன், தென்னாபிரிக்க அணியின் ஹாசிம் ஆம்லா ஆகியோர் அடங்கும். இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியில் மற்றுமொரு தமிழக வீரர் இடம்பிடித்துள்ளார்.

Seenuran

சமீபத்தில் தென்னாபிரிக்கா ஏ அணியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சீனுரான் முத்துசாமி என்பவர் இடம்பெற்றுள்ளார். 1994 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா முதல் ரக கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆல்ரவுண்டரான இவர் 58 முதல் ரக போட்டிகளில் 2990 ரன்களையும் 104 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுளளார்.

- Advertisement -

அதே போல இதுவரை 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள சீனுராம் முத்துசாமி 37 போட்டிகளில் விளையாடி 896 ரன்களையும் 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதோடு டால்பின் என்ற உள்ளூர் அணியில் விளையாடி வரும் இவர் கடந்த ஆண்டு சிறந்த உள்ளுர் வீரர் என்ற விருதினையும் பெற்றுளார்.

muthuswamy

ஏற்கனவே, தென்னாபிரிக்கா யு19 அணியில் 19 வயதான ஜீவேஷன் பிள்ளை என்ற தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒரு இளம் கிரிக்கெட் வீரர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்துள்ள தென்னாபிரிக்கா ஏ அணி, இந்தியா போர்டு ப்ரெசிடெண்ட் லவன் அணியுடன் 2 போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வ டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது.

Advertisement