இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Archer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வீழ்த்தியது. அதுமட்டுமின்றி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ள நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பல மாற்றங்கள் இருக்கும் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்திய ஜோ ரூட் அதே சிறப்பான ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் தொடர்வேன் என்று குறிப்பிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் ஆன்லைன் மூலம் நடந்த உரையாடலின் போது கூறியதாவது :

நாளைய போட்டியில் ஆர்ச்சர், ஆண்டர்சன் மற்றும் பெஸ் ஆகியோர் காயம் காரணமாக விளையாட மாட்டார்கள். இது எங்களுக்கு சற்று பின்னடைவு தான் என்றாலும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மூன்றாவது போட்டியில் ஜாப்ரா ஆர்ச்சர் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். அதேபோன்று இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆண்டர்சன் விளையாட வேண்டும் என்ற காரணத்தினாலேயே இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளித்துள்ளோம்.

anderson

அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர் பெஸ் அணியில் இடம்பெறாதது எங்களுக்கு ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவை என்பதனால் அவர் நாளைய போட்டியில் விளையாட மாட்டார். அதுதவிர பட்லரும் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது பார்வையாளர்கள் இல்லாதது வருத்தமாக இருந்தது ஆனால் நாளைய போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருப்பது மிகுந்த உற்சாகத்தை தருகிறது என கூறியுள்ளார்.

- Advertisement -

Eng-bess

இந்நிலையில் நாளைய டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் டெஸ்ட்டில் இடம்பெற்ற பெஸ், ஆண்டர்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இதில் அவர்களுக்கு பதிலாக மொயின் அலீ, ஸ்டூவர்ட் பிராட், பென் போக்ஸ் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி இதோ :

1) ஜோ ரூட், 2) மொயின் அலி, 3) ஸ்டூவர்ட் பிராட், 4) ரோரி பர்ன்ஸ், 5) பென் போக்ஸ், 6) டான் லாரண்ஸ், 7) ஜாக் லீச், 8) ஒல்லி போப், 9) டோம் சிப்லே, 10) பென் ஸ்டோக்ஸ், 11) ஒல்லி ஸ்டோன்
(அ) கிறிஸ் வோக்ஸ்

Advertisement