IND vs RSA : இன்றைய 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு கட்டாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணியானது இந்த தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

toss

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இந்திய அணி கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரிஷப் பண்ட் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த போட்டியில் இருந்து தங்களது ஆதிக்கத்தை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெளிப்படுத்த காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பே அனைவரது மத்தியிலும் உள்ளது. ஆனால் தற்போது வரை உள்ள தகவலின் படி இந்திய அணியில் எந்த வித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான வீரர்கள்.

Shreyas Iyer IND

அதோடு நிச்சயம் இந்த போட்டியில் இந்த அணியை வைத்து வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதனாலும் பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றம் ஏற்படாது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதே வேளையில் ஒருவேளை மாற்றம் நிகழும் என்றால் அக்சர் பட்டேல் இடத்திற்கும் பதில் வேறு ஒரு வீரர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டி நடைபெறும் கட்டாக் மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் அந்த ஒரு மாற்றமும் சுழற்பந்து வீச்சாளரை அணியில் கொண்டுவரவே ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்றைய இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இவரை மட்டும் அவசரப்பட்டு டீம்ல சேத்துடாதீங்க ப்ளீஸ். அவருக்கு இன்னும் பிராக்டீஸ் வேனும் – ரவி சாஸ்திரி கருத்து

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்திக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) புவனேஷ்வர் குமார், 9) ஹர்ஷல் படேல், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ஆவேஷ் கான்.

Advertisement