2 மணிநேரம் மழை நின்றும் துவங்காத போட்டி.. 3 ஆம் நாள் ஆட்டமாவது நடைபெறுமா? – விவரம் இதோ

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் 27-ஆம் தேதி நேற்று கான்பூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்களை பிடித்து 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது :

அவ்வேளையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் கனமழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் நடைபெறாமல் போனது. அதனை தொடர்ந்து இன்று செப்டம்பர் 28-ஆம் தேதி இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி எப்போது துவங்கும்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இன்றைய நாள் முழுவதுமே மைதானம் தயாராகாமல் இருந்தால் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது நாளில் இரண்டு மணி நேரம் கிட்டத்தட்ட மழை பெய்யாமல் இருந்தும் போட்டி துவங்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் நேற்று பெய்த கனமழையும், இன்று அவ்வப்போது மழை பெய்ததால் மைதானம் முழுவதும் ஈரப்பதம் காணப்பட்டது.

- Advertisement -

இரண்டு சூப்பர் சாப்பர்கள் வைத்து மைதானத்தை தயார்படுத்தப்பட நினைத்த போதிலும் குறிப்பிடும் அளவு தண்ணீரை மைதானத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. இதன் காரணமாக இந்த இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவில்லை.

இதையும் படிங்க : 4 மணி நேரத்தில் 2 முறை.. விராட் கோலியை முந்திய வில்லியம்சன்.. இலங்கையிடம் நியூசிலாந்தை மழை காப்பாற்றுமா?

நிச்சயம் நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. ஏனெனில் இன்றைவிட நாளை வானிலை சுமாராக இருக்கும் என்பதனால் மூன்றாவது நாள் ஆட்டமாவது நடைபெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement