- Advertisement -
டி20

97 ரன்ஸ்.. உடைந்த 10க்கு 10 தோல்வி.. கடைசி பந்தில் மாஸ் காட்டிய ஹெட்மையர்.. அமெரிக்காவில் சாதனை சேசிங்

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூன் 28ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு டாலஸ் நகரில் 18வது போட்டியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் சீட்டல் ஆர்காஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சீட்டல் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ நியூயார்க் அணிக்கு குவின்டன் டீ காக் 1, மோனக் பட்டேல் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் மற்றும் திஜேந்தர் திலோன் ஆகியோர் சீட்டல் பவுலர்களை அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்தார்கள். அதில் நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

பூரான் அதிரடி:

மறுபுறம் இரு மடங்கு வேகமாக விளையாடிய திலோன் அரை சதத்தை அடித்து 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் 95 (35) ரன்களை விளாசி அவுடடானார். அடுத்ததாக வந்த பொல்லார்ட் டக் அவுடடானாலும் மறுபுறம் அட்டகாசமாக விளையாடிய பூரான் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதத்தை அடித்து 108* (60) ரன்களை விளாசினார். அதனால் 20 ஓவரில் எம்ஐ நியூயார்க் 237/4 ரன்களை எடுத்தது.

சீட்டல் அணிக்கு அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி, கெய்ல் மேயர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வைத்தார்கள். அடுத்ததாக விளையாடிய சீட்டல் அணிக்கு துவக்க வீரர்கள் ஜஹாங்கீர் 14, ஜோஸ் ப்ரவுன் 5 ரன்களில் அவுடடாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா அடித்து நொறுக்கி 30 (9) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

10 தொடர் தோல்வி:

அவருடன் சேர்ந்து விளையாடிய கெய்ல் மேயர்ஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 37 (20) ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த சிம்ரோன் ஹெட்மையர் சரவெடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார். எதிர்ப்புறம் வந்த ஹென்றிச் க்ளாசன் 26 (13) ரன்னில் அவுடடானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஹெட்மையர் அரை சதத்தை அடித்து தம்முடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

அதற்கடுத்ததாக வந்த சுஜித் நாயக் 6 (13), ஜெரால்ட் கோட்சி 8 (10) ரன்களில் அவுடடாகி ரன் ரேட்டை அதிகரித்துச் சென்றார்கள். ஆனால் அதற்கெல்லாம் அசராத ஹெட்மையர் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் கடைசி ஓவரில் சீட்டல் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் வீசிய பொல்லார்ட் 1, 0, 1, 0, 2 என முதல் 5 பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

சாதனை சேசிங்:

அதனால் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபைன் லெக் மேலே அற்புதமான சிக்சரை அடித்த ஹெட்மையர் மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 238/7 ரன்கள் எடுத்த சீட்டல் அணி 10 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி வெற்றி பெற்றது. 2024இல் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் தோற்ற அந்த அணி இந்த வருடமும் முதல் 5 போட்டிகளில் தோற்றது.

இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸ்ஸே ரிஷப் பண்டை பார்த்து ரசிக்குறாரு.. அந்த அளவுக்கு அசத்துறாரு – மைக்கல் வாகன் பாராட்டு

அந்தத் தொடர் தோல்விகளை 5 பவுண்டரி 9 சிக்ஸர்களை பறக்க விட்டு நிறுத்திய ஹெட்மையர் 97* (40) ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் வாயிலாக எம்எல்சி வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக சீட்டால் சாதனை படைத்தது.

- Advertisement -