ஐ.பி.எல் ஏலத்தில் இவரை 10 கோடிக்கு மேல் எடுப்பது முட்டாள் தனம் – ஸ்காட் ஸ்டைரிஸ் ஓபன்டாக்

- Advertisement -

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க போகிறது. இந்த வருட ஐபிஎல் தொடர் சென்ற வருட ஐபிஎல் தொடரை போலல்லாமல், முழுவதும் இந்தியாவில் நடைபெறும். இதனால் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் எதிர்பார்ப்பு முன்பு எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடம் ஒரு மிகப்பெரிய ஏலம் நடக்கப்போகிறது. இதற்காக இருக்கும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து விட்டு மற்ற வீரர்கள் எல்லாம் வெளியேற்றி விட்டது.

ipl trophy

- Advertisement -

பஞ்சாப் அணியில் அப்படித்தான் கிளன் மேக்ஸ்வெல் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். கடந்த ஏழு வருடங்களாக அந்த அணிக்காக விளையாடினாலும் ஒரே ஒரு வருடம் மட்டுமே 500க்கு மேல் அடித்திருக்கிறார். அதற்குப் பின்னர் அணியை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு எந்த ஒரு செயல் முறையும் அவரிடம் இருந்து வரவில்லை. மேலும் சென்ற வருடத்தில் பத்து கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் மேக்ஸ்வெல்.

ஆனால் சென்ற வருட ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் ஆடி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடுப்பான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை அணியில் இருந்து வெளியேற்றி விட்டது. ஆஸ்திரேலிய அணிக்காக நன்றாக விளையாடும் கிளன் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணி என்று வந்துவிட்டால் பெரிதாக ரன் குவிப்பது இல்லை. இதன் காரணமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

maxwell 1

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் மேக்ஸ்வெல் பற்றி விமர்சனம் வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 10 கோடிக்கு மேல் கிளன் மேக்ஸ்வெலை எடுக்க யாராவது திட்டமிட்டிருந்தால் அவர்களது தலையில் அவர்களே பாறையை தூக்கி வைத்துக்கொள்வது போன்றே கூறலாம். அந்த அளவிற்கு அவரது ஆட்டம் ஐ.பி.எல் தொடரில் மோசமாக இருக்கிறது.

Maxwell

அவர் நல்ல வீரர்தான் அவரிடம் திறமை இருக்கிறது. ஆனால் நாம் அவரை‌ மிகைப்படுத்தி விட்டோம். ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக ஆடவில்லை. யாராவது அவரை 10 கோடி கொடுத்து எடுத்தால் அவர் தலையில் அவர்களே சுமையை வைத்துக்கொள்வதுக்கு சமம் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ்.

Advertisement