ரெய்னாவின் இடத்தில் பேட்டிங் செய்யும் வீரர் குறித்து நிறைய யோசிக்காதீங்க. இவர் போதும் சரியா இருப்பார் – ஸ்காட் ஸ்டைரிஸ்

Styris
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் துவங்க இன்னும் ஏழு நாட்களே உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை தொடர வேண்டும் என்று மும்பை அணியும், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க சென்னை அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Raina

- Advertisement -

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பதே தற்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் விளையாட பல வீரர்களின் பெயரை பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நியூசிலாந்து மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் ரெய்னாவின் இடத்தில் விளையாட சரியான நபர் குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : ரெய்னாவின் இடத்தில் விளையாட நிச்சயம் அம்பத்தி ராயுடுவை தேர்வு செய்யவேண்டும்.

Rayudu

ராயுடு விளையாடுவது தான் அந்த இடத்தில் சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ரெய்னா அணியில் இல்லாதது டாப் ஆர்டரில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவுதான் இருப்பினும் அந்த மூன்றாவது இடத்தில் ராயுடு தன்னை நிலை நிறுத்திக் கொள்வார். ஏனெனில் 2018ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடிய ஆட்டமே அதற்கு சான்றாக அமையும்.

rayudu

அவரால் மூன்றாவது இடத்தில் நிச்சயம் சிறப்பாக ஆட முடியும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அனுபவ வீரரான ஹர்பஜன் சிங்கின் இழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவருக்கு பதிலாக நிறைய பவுலர்கள் சிஎஸ்கே அணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement