சி.எஸ்.கே பெஸ்ட்டா ? மும்பை பெஸ்ட்டா ? புள்ளிவிவரத்தோடு புட்டு புட்டு வைத்த – ஸ்காட் ஸ்டைரிஸ்

CSK1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த தொடரின் பதிமூன்றாவது சீசனாக மார்ச் 29 ஆம் தேதி துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

- Advertisement -

மேலும் ஏப்ரல் 15க்கு பிறகு இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது மும்பை அணி சிறந்ததா ? இல்லை சென்னை சிஎஸ்கே சிறந்ததா ? என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 12 ஐபிஎல் சீசனில் முக்கிய அணிகளாக சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகிய அணிகள் திகழ்கின்றன. இதில் மும்பை அணி 4 முறையும், சென்னையில் மூன்று முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி எப்போது நடந்தாலும் அது சிறப்பான ஒன்றாக அமையும்.

CskvsMi

மேலும் 2016, 17 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி தடையின் காரணமாக இரண்டு சீசன்களாக தவறவிட்டது. மற்றபடி பத்து சீசன்களில் எட்டு சீசன்களில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. அதேபோல மும்பை அணி சென்னை அணியை 2013, 15, 19 ஆகிய ஆண்டுகளில் வீழ்த்தி மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இவை இரண்டில் எது சிறந்த அணி என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறந்த ஐபிஎல் அணி என்று நான் கூறுவேன் என்று தெரிவித்தார். மேலும் அது குறித்து அவர் குறிப்பிடுகையில் : சிஎஸ்கே அணி தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

csk

ஒரு சீசனில் தோற்று விட்டு அடுத்த சீசனில் கோப்பையை வெல்லாமல் மொத்த சீசனிலும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. மேலும் அது மட்டுமின்றி இந்திய அணிக்கு தேவையான வீரர்களை அதிகளவு சிஎஸ்கே உருவாக்கித் தந்துள்ளது என்று குறிப்பிட்டார். அதேபோன்று நாக்அவுட் சுற்று போட்டிகளில் சிஎஸ்கே அணி பெருமளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்று சி.எஸ்.கே அணியை புகழ்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement