மலிங்காவே வந்து கடைசி ஓவர் வீசினாலும் சி.எஸ்.கே வில் இந்த பினிஷர் இருக்கும்வரை ஒன்றும் செய்ய முடியாது – ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து

Malinga
- Advertisement -

இந்தியாவில் பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பி.சி.சி.ஐ யும் ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Ipl cup

- Advertisement -

மேலும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகும் இந்த தொடர் நடைபெறுவதற்கு சாத்தியங்கள் குறைவு என்று கூறப்படும் நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து ஏகப்பட்ட செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான பலம் பலவீனம் குறித்து ஏகப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போது நடந்தாலும் பரபரப்பாக காணப்படும். இரு அணிகளைச் சேர்ந்த ரசிகர்களும் இணையத்தில் மோதிக் கொள்வதும் வழக்கம். அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் ரசிகர் பட்டாளம் ஏகத்திற்கும் இருக்கின்றது.

CskvsMi

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் மும்பை அணியின் டெத் ஸ்பெஷலிஸ்ட் மலிங்கா சிறந்தவரா ? அல்லது சென்னை அணியின் பினிஷர் தோனி சிறந்தவரா ? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டியில் நிச்சயம் சிறந்த பினிஷர் எப்படி சிறந்த டெத் பவுலரை எதிர்கொள்கிறார் என்பதே அந்த அணியின் வெற்றி தோல்விக்கு முக்கிய காரணமாக அமையும். அதன்படி நிச்சயம் மலிங்காவை விட தோனியே சிறந்தவர் என்று நான் கூறுவேன். தோனி உள்ளவரை சி.எஸ்.கே அணிக்கு வேறு பினிஷர் தேவையில்லை.

Dhoni 1

ஏனெனில் சிஎஸ்கே அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி நாக் அவுட் சுற்றை தவறவிட்டது கிடையாது. புதுமுக வீரர்கள் வந்தாலும் அவர்களை தயார் செய்து தோனி அணியை உற்சாகமாக வைத்துள்ளார். மேலும் அவர் போன்ற ஒரு பினிஷர் எதிரில் இருக்கும் போது எந்த பவுலரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் டோனியை பாராட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement