நான் விளையாடுனதுலேயே இவங்க 11 பேர் தான் பெஸ்ட். நியூசி வீரர் வகுத்த பெஸ்ட் அணி – விவரம் இதோ

- Advertisement -

நியூசிலாந்து அணிக்காக 1999 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மூன்று விதமான போட்டிகளில் விளையாடியவர் ஸ்காட் ஸ்டைரிஸ். இவர் நியூசிலாந்து அணிக்காக 29 டெஸ்ட் போட்டியிலும், 187 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் . இந்நிலையில் தனக்கு எதிராக ஆடிய அணிகளில் உள்ள அனைத்து வீரர்களையும் திரட்டி ஒரு சிறந்த ஒரு நாள் போட்டி அணியை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

Styris 1

- Advertisement -

இந்த அணியின் துவக்க வீரர்களாக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரும், இலங்கையின் சனத் ஜெயசூரியாவின் இடம்பெற்றுள்ளனர். அடுத்து மூன்றாவது இடத்திற்கு உலகின் தலை சிறந்த வீரரும் தற்போதைய கிரிக்கெட்டின் அரசனாக வலம் வரும் விராட் கோலி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த வீரர் ரிக்கி பாண்டிங்கும் 5வது இடத்தில் அதிரடியாக ஆட டிவில்லியர்ஸ் அணியை அலங்கரிக்கின்றார். அதனை தொடர்ந்து ஆல்-ரவுண்டராக தென்னாபிரிக்காவின் ஜாம்பவான் ஜாக் காலில் இடம் பெறுகிறார் . விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக உலகின் தலைசிறந்த ஒருநாள் வீரர் தோனி இடம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளராகஷென் வார்னும், முத்தையா முரளிதரன் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மற்றும் கிளீன் மெக்ராததும் இடம்பிடித்துள்ளனர்.

Styris 2

சச்சின் டெண்டுல்கர், சனத் ஜெயசூரியா, ரிக்கி பாண்டிங் (கேப்டன்), விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஜாக் காலிஸ், தோனி(விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ராத், லசித் மலிங்கா.

Advertisement