- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியை வச்சு செய்து மிரட்டலான சாதனையை நிகழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த விராட் கோலி அதன் பின்னர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி இந்த தொடரில் பெரிய சறுக்கலை சந்தித்துள்ளார்.

விராட் கோலியை வீழ்த்தி சாதனை நிகழ்த்திய போலந்து :

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியை தவிர்த்து நடைபெற்று முடிந்த நான்கு போட்டியில் விராட் கோலி பெரிய அளவில் ரன்களை குவிக்காமல் தொடர்ச்சியாக ஒரே மாதிரி ஆட்டமிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆஃப் சைடு ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளை அடிக்க நினைத்து விராட் கோலி தொடர்ச்சியாக ஒரே மாதிரி ஆட்டமிழந்து வருவது இந்த தொடரில் அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இப்படி விராட் கோலி தொடர்ச்சியாக ஆட்டமிழந்துவது இழந்து வருவது ஒரு பக்கம் இருக்கும் வேளையில் :

அவரை வீழ்த்தி புதிய சாதனையை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஸ்காட் போலந்து நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ஒரே டெஸ்ட் தொடரில் விராட் கோலி அதிக முறை வீழ்த்தியவர்கள் என்ற பட்டியலில் இங்கிலாந்து வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் டாட் முற்பி ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர்.

- Advertisement -

அவர்கள் இருவருமே விராட் கோலியை ஒரே டெஸ்ட் தொடரில் நான்கு முறை வீழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் தொடரில் விராட் கோலியை நான்காவது முறையாக வீழ்த்தி ஸ்காட் போலந்தும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : 70 வருஷத்துல சிட்னி மைதானத்தில் இப்படி நடந்தது 2 ஆவது முறை.. சுவாரசியமான இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட்

இந்த தொடரில் மட்டும் விராட் கோலிக்கு எதிராக 5 இன்னிங்ஸ்களில் 68 பந்துகளை வீசியுள்ள அவர் வெறும் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முறை அவரது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதோடு இந்த தொடரில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -