
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மெல்போன் நகரில் டிசம்பர் 26-ஆம் தேதியான நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியது.
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்து இன்னும் ஆஸ்திரேலியா அணியை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 ரன்களில் இருந்தபோது முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் அணியின் எண்ணிக்கை 51 ரன்களாக இருந்தபோது கே.எல் ராகுல் இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன் காரணமாக இந்திய அணி 51 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மூன்றாவது இடத்தில் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பாக விளையாடிய வேளையில் அணியின் எண்ணிக்கை 153 ரன்களாக இருந்தபோது 102 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்திருந்த வேளையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் 36 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியும் ஆட்டமிழந்தார். இப்படி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்ததும் இந்திய அணி சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது.
இதையும் படிங்க : மீண்டும் வலையில் சிக்கிய இந்திய அணி.. பாலோ ஆனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? – விவரம் இதோ
அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் விராட் கோலிக்கு எமனாய் மாறிய வேகப்பந்து வீச்சாளர் யார் என்றால் 35 வயதான வயதான ஸ்காட் போலந்து தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லை என்றாலும் இதுவரை விராட் கோலிக்கு எதிராக 73 பந்துகளை மட்டுமே வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்றாவது முறையாக வீழ்த்தியுள்ளார்.