மீண்டும் வலையில் சிக்கிய இந்திய அணி.. பாலோ ஆனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? – விவரம் இதோ

IND
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய அணியை இந்த தொடரில் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்கிற நிலையில் இருந்த வேளையில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? :

இதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகள் இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஆனால் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அதன்பிறகு தொடர்ச்சியாக தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் மழை காரணமாக தோல்வி இருந்து தப்பி டிரா செய்தது.

- Advertisement -

இந்நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்துள்ள வேளையில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி பாலோ ஆனில் இருந்து தப்பிக்க எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்துள்ளதால் இந்திய அணி குறைந்தபட்சம் 275 ரன்கள் அடித்தால் மட்டுமே பாலோ ஆனை தவிர்க்க முடியும். போட்டியின் இரண்டாம் நாளான இன்று ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் இருவருமே அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி சறுக்களை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : இதுக்கு அவர் 6 ஆவது பேட்ஸ்மேனாகவே விளையாடி இருக்கலாம்.. ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள்

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 164 ரன்கள் அடித்துள்ள இந்திய அணி இன்னும் பாலோ ஆனை தவிர்க்க 111 ரன்கள் குவிக்க வேண்டும். கைவசம் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளதால் இந்திய அணி எப்படியாவது பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement