இதுக்கு அவர் 6 ஆவது பேட்ஸ்மேனாகவே விளையாடி இருக்கலாம்.. ரோஹித் சர்மாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் போது இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது ஜோடி விளையாடி வந்தது. ஆனால் மெல்போர்ன் நகரில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மீண்டும் இந்திய அணியின் துவக்க வீரர்களுக்கான ஜோடி மாற்றப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவை கிண்டல் செய்யும் ரசிகர்கள் :

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவிக்க பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ரோகித் சர்மா அடுத்த இரண்டு போட்டியில் 6 ஆவது வீரராக களமிறங்கி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மீண்டும் அவர் துவக்க வீரராக களமிறங்க முடிவு செய்து இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கினார்.

ஆனால் இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐந்து பந்துகளை மட்டுமே சந்தித்த ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவரை இந்திய அணியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

- Advertisement -

அதாவது ஏற்கனவே ஆறாவது இடத்தில் விளையாடிய நீங்கள் துவக்க வீரராக வந்து இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததுக்கு மீண்டும் ஆறாவது இடத்திலேயே விளையாடி இருக்கலாம். நன்றாக விளையாடி வந்த கே.எல் ராகுல் துவக்க வீரராகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பார் அவரை எதற்கு இடமாற்றம் செய்தீர்கள்? என்று ரோஹித் சர்மாவின் இந்த முடிவை இந்திய அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : என்ன தம்பி என்னாச்சு.. பேட்டிங் செய்ய வந்த கே.எல் ராகுலை நக்கல் செய்த நாதன் லயன் – என்ன நடந்தது?

ரசிகர்கள் கூறுவது போலவே ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கே.எல் ராகுல் 42 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement