2020 உலகக்கோப்பை டி20 தொடருக்கு தேர்வான கடைசி இரு அணிகள் இவைதான் – விவரம் இதோ

Cup

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை டி20 உலககோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

PNG 1

இதில் முதல் முன்னணி 10 அணிகள் நேரடியாக விளையாடும் தகுதியைப் பெற்றது. அதன் பிறகு மீதி இருக்கும் ஆறு இடங்களுக்காக 14 அணிகள் தகுதி சுற்று போட்டியில் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்த போட்டியில் பங்கேற்றன. இதிலிருந்து ஏற்கனவே பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நபீபியா ஆகிய நாடுகள் தகுதி சுற்றில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த சுற்றுகளின் முடிவில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் கடைசி இரண்டு அணிகளாக உலக கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடைசியாக தேர்வான இந்த 6 அணிகளும் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Oman

Scotland

- Advertisement -

முதல் 10 அணிகளாக இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என அணிகள் பலமாக இருப்பதால் மீதமுள்ள இந்த சிறிய 6 அணிகள் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்பது உலக கோப்பை தொடரின் போது தெரியும்.