கடவுளே பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க.. இதெல்லாம் சட்டவிரோதம்.. ஐபிஎல் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

Wasim Akram 2
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் வழக்கம் போல 10 அணிகளும் கோப்பையை வெல்வதற்காக கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பவுலர்களுக்கு கருணை காட்டாமல் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாகும்.

ஆனால் இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற பேட்ஸ்மேன்கள் பவுலர்களை மனிதர்களாக பார்க்காமல் காட்டுதனமாக அடித்து நொறுக்குகிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்த ஹைதராபாத் அணி பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடர் மட்டுமின்றி பிரீமியர் லீக் டி20 தொடரில் அதிகப்பட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்தது.

- Advertisement -

பணத்துக்காக அடி:
அத்துடன் டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 5 ரன்கள் 100 ரன்கள் அடித்த ஹைதராபாத் ஒரு டி20 போட்டியில் வேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையும் படைத்தது. இந்நிலையில் அடிப்படை விதிமுறைகள் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் இந்த காலத்தில் தாம் விளையாடவதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஹைதராபாத் அணி 5 ஓவரில் 100 ரன்கள் அடிப்பதெல்லாம் சட்ட விரோதமானது என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக அடி வாங்க வேண்டிய நிலைக்கு பவுலர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நன்றி கடவுளே. நல்ல வேளையாக இந்த தலைமுறையில் நான் விளையாடவில்லை. அதாவது அவர்கள் 20 ஓவரில் 270 ரன்கள் அடிக்கிறார்கள்”

- Advertisement -

“அது 50 ஓவரில் 450 அல்லது 500 ரன்கள் அடிப்பதற்கு சமமாகும். இவ்வளவு பெரிய ரன்களை நீங்கள் வருடத்துக்கு ஒருமுறை அடித்தால் பரவாயில்லை. ஆனால் இங்கே ஒரே தொடரில் அவ்வளவு பெரிய ஸ்கோர் 3 – 4 முறை அடிக்கப்பட்டுள்ளது. அது பேட்டிங் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறது என்பதை காண்பிக்கிறது. இருப்பினும் 5 ஓவரில் 100 ரன்கள் அடிப்பது சட்டவிரோதமானது. அது எப்படி நடக்க முடியும்? ஒருவேளை நீங்கள் ஃபுல் டாஸ் பந்துகளை வீசினாலும் அது கடினமாகும்”

இதையும் படிங்க: வெளியேறப்போகும் முஸ்தஃபிசுர் ரஹ்மான்.. சி.எஸ்.கே பிளேயிங் லெவனுக்குள் வரவிருக்கும் இலங்கை வீரர் – விவரம் இதோ

“பவுலர்களைப் பொறுத்த வரை இது (ஐபிஎல்) பணத்தை வாங்கிக்கொண்டு அடிவாங்கி அழிந்து போங்கள் என்பது போல் இருக்கிறது. எனவே டி20 ஃபார்மட்டில் பவுலர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று கூறினார். அதே போல இப்படி பேட்ஸ்மேன்கள் அடிக்கடி அடித்து நொறுக்குவதை பார்ப்பது புளிப்பை ஏற்படுத்துவதாக சுனில் கவாஸ்கரும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே மைதானத்தின் பவுண்டரி அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement