சி.எஸ்.கே பிளேயிங் லெவனில் இருந்து கழற்றிவிடப்பட இருக்கும் 2 தோனியின் செல்ல பிள்ளைகள் – கட்டாயத்தில் தோனி

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோணியின் செல்லப் பிள்ளைகளாக விளங்கும் இரண்டு வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது குறித்து அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த சீசனில் சென்னை அணிக்கு பெரும் தொல்லையாக இருந்தது பேட்ஸ்மேன்கள். ஆனால் இந்த சீசனில் சென்னை அணிக்கு பெரும் தொல்லையாக இருப்பது பௌலர்கள். எனவே தோனியின் நம்பிக்கையை பெற்ற தீபக் சஹாரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஹரி சங்கரை அணியில் சேர்ப்பது குறித்த ஆலோசனையில் அணி நிர்வாகம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Chahar4

- Advertisement -

கடந்த சீசனில் இருந்தே லைன் அன்ட் லெந்தில் பந்து வீச தீபக் சஹார் திணறி வருவதை ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். முதல் போட்டியிலும் சொல்லிக்கொள்ளும்படி அவர் பந்து வீசவில்லை எனவே அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும் வெளிநாட்டு வீரர்களான லுங்கி இங்கிடி மற்றும் பெஹ்ரண்டாஃப் இன்னும் அணியோடு இணையவில்லை.

இப்படியிருக்க கடந்த சில ஆண்டுகளாகவே காயங்கள் காரணமாக பார்மில் இல்லாத பிராவோவிற்க்கும் ஓய்வு கொடுத்துவிட்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டு பௌலரை களமிறக்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு பாஸ்ட் பௌலர்களாக தற்போது சாம் கரன் மற்றும் பிராவோ மட்டுமே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bravo

ஆனால் அணி நிர்வாகம் இந்த இரு வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. கடந்த சீசனில் கேதர் ஜாதவ் சரியாக விளையாடாத போதும் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஏனெனில் அவர் தோனியின் விருப்ப வீரர் ஆவார். அதே போல் பிரோவோவும், தீபக் சஹாரும் தோணியின் விருப்பத்துக்குறிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அணியில் மாற்றம் வருமா அல்லது தோனி தன் செல்லப் பிள்ளைகளோடே களமிறங்குவாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement