கோலியின் பேட்டிங்கை பார்க்க டிவியை போட்டேன் ஆனால் – சூரியகுமார் ஆட்டத்தை வியந்து பாராட்டும் பாக் ஜாம்பவான்

Avesh Khan Virat Kohli KL rahul Chahal India
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா தன்னுடைய 2 லீக் போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் முதலாவதாக நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்தியா ஹர்திக் பாண்டியாவின் அதிரடியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதே மைதானத்தில் கடந்த வருடம் உலகக் கோப்பையில் முதல் முறையாக சந்தித்த வரலாற்று தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதைத்தொடர்ந்து ஹாங்காங்க்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

Suryakumar-Yadav-1

துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ரோஹித் 21, ராகுல் 36 என தொடக்க வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்து ஆட்டமிழந்த பின் களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் கடைசி வரை அவுட்டகாமல் 98 ரன்களை விளாசி இந்தியா 192 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார். அதில் விமர்சனத்தை சந்தித்துள்ள விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்கள் எடுக்க மறுபுறம் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அட்டகாசமான பேட்டிங்:
குறிப்பாக கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட மொத்தம் 4 சிக்ஸர்களை விளாசி 26 ரன்களை குவித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை யுவராஜ் சிங்க்கு பின்பும் பெற்றார். அதைவிட ஏற்கனவே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் பாராட்டுவதற்கு சான்றாக மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடித்த அவர் பார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைத்தார்.

Suryakumar Yadav

30 வயதில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக செயல்படும் இவர் எந்த சூழ்நிலையில் எவ்வளவு அழுத்தமாக இருந்தாலும் களமிறங்கும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடும் திறமையை பெற்றுள்ளார். 2021 முதல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக (5) அசத்தும் இவர் 25 போட்டிகளிலேயே உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக உயரும் அளவுக்கு இமாலய வளர்ச்சி கண்டுள்ளார்.

- Advertisement -

மெயிசிலிர்ந்த அப்ரிடி:
இந்நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க தொலைக்காட்சியை போட்டதாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் நட்சத்திரம் சாகித் அப்ரிடி சூரியகுமார் யாதவ் ஆட்டத்தை பார்த்து மெய் சிலிர்த்ததாக கூறியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த போட்டியை பார்ப்பதற்கு எனக்கு குறைந்தளவு நேரமே கிடைத்தது. இருப்பினும் விராட் கோலியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக நான் அமர்ந்தேன். அந்த சமயத்தில் அந்த இன்னிங்ஸ் தமக்கு மிகவும் முக்கியமானது என்பதால் அவர் சற்று மெதுவாக விளையாடினார்”

Afridi

“எதிரணி எதுவாக இருந்தாலும் அந்த ரன்கள் நிச்சயமாக அவருக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். எனவே அவர் அந்த வகையில் விளையாடினார். ஆனால் அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசி 2வது பந்திலும் பவுண்டரியை பறக்கவிட்டார். அவர் அதிரடியாக விளையாடுவதற்கு லைசென்ஸ் வாங்கிக்கொண்டு வந்ததைப் போல் விளையாடினார். கிரிக்கெட்டில் பாடி லாங்குவேஜ் முக்கியமானதாகும்”

- Advertisement -

“நீங்கள் சிங்கிள் எடுத்தாலும் பந்தை தடுத்து நிறுத்தினாலும் சிக்சர் அடித்தாலும் களத்தில் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும். அதை சூர்யகுமார் யாதவ் அப்படியே வெளிப்படுத்தினார். குறிப்பாக பெரிய சிக்சர்கள் அடிக்கும் போது அவர் தன்னுடைய சூப்பரான தன்னம்பிக்கையை காண்பித்தார். அவர் மைதானத்திற்கு வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்” என்று பாராட்டினார்.

Suryakumar Yadav IND vs HK

அவர் கூறுவது போல பெரும்பாலும் தம்மால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் விளையாடும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுகிறார். அந்த எண்ணத்தில் பெரும்பாலும் சாதிக்கும் அவர் குறைவான ரன்களில் அவுட்டான இன்னிங்சிலும் பெரிய அளவில் பந்துகளை எடுத்துக் கொள்வதில்லை.

இதையும் படிங்க : 2002 நாட்வெஸ்ட் தொடரின் வெற்றியின் அறியாத பின்னணியை பகிரும் முன்னாள் வீரர் – விவரம் இதோ

அந்த வகையில் ஒன்று அதிரடி இல்லையேல் அவுட்டாகி அடுத்த பேட்ஸ்மேனுக்கு வழி விடும் நபராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் தற்சமயத்தில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோரை விட நல்ல பார்மில் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நாயகனாக அவதரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement