கெயில் ஏன் இப்படி சொன்னாருன்னு எனக்கு தெரியல. நான் அவரது நண்பர் – தலைகீழாக மாறிய சர்வான் கெயில் மோதல்

Sarvan
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவதைப் போலவே கரீபியன் தீவுகளிலும் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. இந்த தொடரிலும் கிட்டத்தட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. இதில் ஜமைக்கா அணிக்காக விளையாடி வருகிறார் கிரிஸ் கெய்ல். அந்த அணி கடந்த சில முறைகளில் கோப்பை வென்றதற்கு இவரும் ஒரு பெரும் காரணமாக இருந்துள்ளார்.

chris-gayle

இந்நிலையில் அந்த அணியில் இருந்து சமீபத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து டேரன் சம்மி தலைமையிலான செயின்ட் லூசியா அணியில் இணைந்துள்ளார் கெய்ல். இந்நிலையில் ஜமைக்கா அணியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜமைக்கா அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரர் ராம்நரேஷ் சர்வான் தான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் யூடியூப் இணையதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு பேசியுள்ளார்.

- Advertisement -

ராம்நரேஷ் சர்வான் நீ ஒரு மிகப்பெரிய பாம்பு. இப்போதைக்கு நீ கரோனா வைரசை விட மிகக் கொடியவனாக மாறி விட்டாய். என்னை ஜமைக்கா அணியில் இருந்து வெளியேற்றுவதில் உனக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. அணி உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி உனக்கு தேவையானவற்றை செய்து கொள்கிறாய்.

sarvan

அணியை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். அணியில் உள்ள வீரர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. அதனை தாண்டி நாம் இருவரும் நண்பர்கள் என்று அனைவரிடமும் கூறி இருக்கிறாய். ஆனாலும், இன்னும் ஏன் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு, என்னை பழிவாங்கி விட்டாய். கரீபியன் மக்கள் உன்னை நேசிக்க மாட்டார்கள்.

- Advertisement -

உன்னிடம் சரியான முதிர்ச்சியும் அனுபவமும் இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி வைத்து விட்டாய். என்னை குறைவாக மதிப்பிட்டு விட்டாய். 1996ஆம் ஆண்டிலிருந்து நான் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தில் நல்ல வீரராக நான் விடை பெறுவேன் என்று கூறியுள்ளார் கிறிஸ் கெயில்.

Sarvan 1

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்து சர்வான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது : 2020ஆம் ஆண்டு கரீபியன் லீக் போட்டிக்கான ஜமைக்காவின் அணியிலிருந்து கெயிலை நீக்க எடுத்த முடிவில் எனது பங்கு எதுவும் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வெளியிட்ட வீடியோவில் தவறான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி என் மீது உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
என்னை குறிவைத்து அவர் அதிகமாக தாக்கியும் பேசியுள்ளார்.

ஆனாலும் என்னை தவிர அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ள மற்றவர்களின் நலன் காக்கவே நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிமுகமானதிலிருந்து கெயிலுடன் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன். அவரது திறமை அபாரமானது அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. அதுமட்டுமின்றி அவர் எனது நெருங்கிய நண்பரும் கூட ஆனால் அவரது இத்தகைய தவறான குற்றச்சாட்டுகள் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நான் உதவி பயிற்சியாளராக பணியாற்றியபோது தலைமை பயிற்சியாளர் முயன்றதாக கூறியது, அவருக்கு மதிப்பு அளிக்காத வகையில் வெளிநாட்டு வீரர்களை தூண்டியதாக கூறியது உள்ளிட்ட எந்த புகாரிலும் உண்மை இல்லை. கெயில் சர்ச்சைகளில் சிக்கிய போதெல்லாம் அவருக்குப் பக்கபலமாக நின்றவன் நான். ஆனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக அவர் என் மீது குற்றச்சாட்டுகளை அளித்து வருவது வேதனையாக இருக்கிறது. புதிய அணியில் அவர் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என்று சர்வான் கூறியுள்ளார்.

Advertisement